எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கைப்பற்றுவோம் - விமல் வீரவன்ச.!
பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை எம் வசப்படுத்தி ஆட்சியைக் கைப்பற்றும் வரையில் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க் கட்சித் தலைவராக்குவதே எமது பிரதான இலக்காகும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளாா்.
மேலும் குறிப்பிடுகையில்,
மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்பட்டுள்ள 20 ஆவது திரு த்தச் சட்டத்தை தோற்கடிக்க வேண் டும் என்ற நோக்கம் எமக்குள்ளது. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கவும் நாட் டைத் துண்டாடவும் மக்கள் விடுதலை முன்னணியும் ஐக்கிய தேசியக் கட்சியும் முன்னெடுக்கும் நோக்கங்கள் எமக்கு நன்றாகவே தெரிகின்றன.
எனவே நாட்டைக் காப்பாற்ற வேண்டிய தேவை எமக்குள்ளது.
கடந்த ஜனதிபதித் தேர்தலின் பின்னர் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்துள்ளார். பாராளுமன்றத்துக்கு அதிகாரங்களை வழங்கியுள்ளார்.
ஆகவே இது போதுமானது. இன்று தேசிய பாதுகாப்பு விடயத்தில் பாரிய அச்சுறுத்தல் உள்ளது.
வடக்கில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும் சூழல் உள்ளது. வடக்கு முதல்வர் நாட்டைத் துண்டாடும் நோக்கத்தில் செயற்பட்டு வருகிறார்.
சிவாஜிலிங்கம் போன்றவர்கள் பிரிவினைவாதக் கொள்கையில் செயற்பட்டு வருகின்றனர். பொலிஸ் அதிகாரங்கள், காணி அதிகாரங்களை கேட்டுக்கொண்டு அவர்கள் வடக்கில் மீண்டும் தனி ராஜ்ஜியமாக செயற்பட முயற்சித்து வருகின்றனர்.
இந் நிலையில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் நோக்கங்கள் மூலமாக விடுதலைப்புலிகளின் இலக்கு என்னவோ அது அரசாங்கத்தின் மூல மாகவே நிறைவேற்றப்படும்.
ஆகவே 20 ஆவது திருத்தச் சட்டத்தை தோற்கடிப்பது குறித்து சகல தரப்புகளுடனும் நாம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம்.
பாராளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சி ஆசனத்தை நாம் கைப்பற்ற வேண்டும். அந்த நோக்கம் எமக்குள்ளது.
குறிப்பாக இந்த அரசாங்கத்தின் ஆட்சி முடிவுக்கு வரும் வரையில் பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவைக் கொண்டுவர வேண்டும். அதற்கான சூழலை நாம் உருவாக்குவது குறித்தும் சிந்தித்து வருகின்றோம்.
இப்போது அரசாங்கத்தில் இருந்து பலர் வெளியேறி எதிர்க்கட்சிக்கு மாறியுள்ளனர். ஆகவே இப்போது கூட்டு எதிர்க்கட்சி பிரதான எதிர்க்கட்சியாக மாற்றம் பெற்றுள்ளது. எனவே மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக மாற் றும் நகர்வுகளை நாம் முன்னெடுக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.