Breaking News

புலிகளை அழிக்க உதவிய நாடுகள் இவைதான்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் போரா ட்டத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதற்கு சர்வதேச சமூகம் இல ங்கை அரசுக்கு உதவியது. இந்தியா, அமெரிக்கா, ஜரோப்பிய ஒன்றியம், ஜக்கிய இராட்சியம், கனடா, அவுஸ்தி ரேலியா, இந்த நாடுகள் எல்லாவற்றி லும் தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத இயக்கமாக தடை செய்யப்பட்டார்கள். 

பலவிதங்களில் அவர்கள் முடக்கப்பட்டார்கள். அவ்விதமான செயற்பாட்டின் காரணமாகத் தான் இலங்கை அரசாங்கம் அவர்களை தோற்கடித்தது என சிறி லங்காவின் எதிர்கட்சி தலைவரான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கத்திற்கு முழு மையான ஒத்துழைப்பை வழங்கிய சர்வதேச சமூகத்திற்கு, தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டியது தார்மீகக் கடமை என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார். 

 சர்வதேச சமூகம் இந்தத் தார்மீகக் கடமையிலிருந்து விலகியிருக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ள எதிர்கட்சித் தலைவர், தமிழ் மக்களை பிரதி நிதித் துவப்படுத்தும் தரப்பினர் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத் தையும் வலியுறுத்தியுள்ளார். 

யாழ்ப்பாணத்தில் நேற்றைய (25.06.2018) தினம் நடைபெற்ற வட மாகாண முதலமைச்சர் சீ்.வீ.விக்கினேஸ்வரனின் “நீதியரசர் பேசுகிறார்” நூல் வெளி யீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தமிழ் தேசியக் கூட்ட மைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளாா். 

வட மாகாண முதலமைச்சர் சீ்.வீ.விக்கினேஸ்வரனின் “நீதியரசர் பேசுகிறார்” நூல் வெளியீட்டு நிகழ்வு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதீதியாகக் கலந்துகொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் “நீதியரசர் பேசுகிறார்” நூலை வெளியிட்டுவைத்ததுடன், முதலமைச்சரின் சகோதரி முதலாவது பிரதியைப் பெற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் விக்கினேஸ்வரனால் எதிர்க்கட்சித் தலைவர் சம்மந்தன் உட்பட ஏனையவர்களுக்கு சிறப்புப் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன. 

இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருத்த பிரதம விருந்தினர் சம்மந்தன் உட்பட ஏனைய விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கெளர விக்கப்பட் டனர். 

இதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட் டத்தின் நியாயத்தன்மையை தெளிவுபடுத்தினார். 

அதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு சர்வதேசம் சிறிலங்கா அரசாங்கத்திற்கு முழுமையான ஆதரவை வழங்கியது தொடர்பி லான தகவல்களையும் அவர் வெளியிட்டார். 

“தமிழீழ விடுதலைப் புலிகள்” மக்கள் சார்பாக எமது மக்களின் உரிமைக ளுக்காக ஒரு மிகவும் தீவிரமான ஆயுதப் போராட்டத்தை நடத்தினார்கள். அந்த முயற்சியில் அவர்கள் வெற்றிபெறவில்லை. ஆனால் அந்த முயற்சியில் நீதி இருந்தது. நியாயம் இருந்தது. அதை எவரும் மறக்க முடியாது. 

தமிழ் மக்களுடைய பிரச்சினை தீர்க்கப்படவில்லை. அவர்களது உரிமைகள் வழங்கப்படவில்லை. என்ற அடிப்டைபயில் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப் பட்டது. இதை எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள். 

இதை சர்வதேச சமூகமும் ஏற்றுக் கொண்டது. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவருவதற்கு சர்வதேச சமூ கம் இலங்கை அரசுக்கு உதவியது. 

இந்தியா உதவியது. அமெரிக்கா உதவியது. ஜரோப்பிய ஒன்றியம் உதவியது. ஜக்கிய இராட்சியம் உதவியது. கனடா உதவியது. அவுஸ்திரேலியா உதவியது இந்த நாடுகள் எல்லாவற்றிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தடை செய்யப் பட்டார்கள். 

பயங்கரவாத இயக்கமாக தடைசெய்யப்பட்டார்கள். பலவிதங்களில் அவர்கள் முடக்கப்பட்டார்கள். அவ்விதமான செயற்பாட்டின் காரணமாகத் தான் இல ங்கை அரசாங்கம் அவர்களை தோற்கடித்தது. 

இதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்துக்கு உறுதியான ஆதரவை வழங்கியது. 

இந்த அடிப்படையில் இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்துக்கு ஒரு வாக் குறுதியை கொடுத்தது. நாங்கள் ஒரு நியாயமான அரசியல் தீர்வை ஏற்படுத்து வோம் என்று அது மாத்திரமல்ல தமிழீழ விடுதலைப் புலிகள் செயற்பட்ட காலத்தில் இலங்கை அரசாங்கம் அரசியல் தீர்வு சம்பந்தமாக பல்வேறு முன் மொழிவுகளை முன்வைத்தது. 

அவ்விதமான தீர்மானங்களை இன்று வைப்பதற்கு அவர்கள் பின்நிற்கிறார்கள். இதை சர்வதேச சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். தமக்கு ஒரு தார்மீகக் கடமை இருக்கிறது என்று சர்வதேச சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும். 

இலங்கையில் வாழுகின்ற தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு ஒரு நியா யமான நிரந்தரமான அரசியல் தீர்வை காண்பதற்கு உரிய பங்களிப்பைச் செய் வதற்கு சர்வதேச சமூகத்துக்கு ஒரு பாரிய பங்கிருப்பதை சர்வதேச சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். 

இதில் இருந்து அவர்கள் தவற முடியாது. தமிழ் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுக்கும் பயணத்தில் எவரையும் பகைக்க வேண்டிய அவசியமில்லை என்றும் குறிப்பிட்ட சம்பந்தன், அனைவருடனும் நட்புறவை பேணி தமிழ் மக் களின் நியாயமான கோரிக்கைகளை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளாா். 

அதேவேளை தென்பகுதி மக்கள் அனைவரும் இனவாதிகள் அல்லர் என்றும் சுட்டிக்காட்டிய எதிர்கட்சித் தலைவர் சம்பந்தன், சிங்கள மக்கள் மத்தியில் வாழும் ஒருசிலரே இனவாதிகளாக இருப்பதாகவும் கூறினார். 

இதனால் பெரும்பான்மை மக்கள் மத்தியிலுள்ள சிறுபான்மை இனவாதி களுக்கு பெரும்பான்மை மக்களை வழிநடத்துவதற்கு இடம்கொடுக்கக் கூடாது என்றும் வலியுறுத்திய சம்பந்தன், தமிழர் தரப்புகளிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் பிரிந்து செயற்பட முடியாதெனத் தெரிவித்துள் ளாா். 

வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனுடன் தொடர்ச்சியாக முரண் பட்டுவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் இந்த நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார். 

அதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான தமிரசுக் கட்டிசியின் தலைவர் மாவை சேனாதிராசா, ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும் கலந்து சிறப்பித்துள்ளனா். 

- நன்றி - ஐ.பி.சி. இணையத்திற்கு -