நாம் எமது கேள்விகளை யாரிடம் கேட்பது - நளிந்த ஜெயதிஸ்ஸ.!
தேசிய பாதுகாப்பு குறித்து விவாதிக் கப்படும் நிலையிலும் வடக்கின் முக் கிய பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பி வரும் நிலையில் பாதுகாப் புக்கு பொறுப்பான அமைச்சர் ஜனாதி பதியோ அல்லது இராஜாங்க அமைச் சரோ சபையில் இல்லாதது கண்டிக் கத்தக்கது என ஜே.வி.பியின் பாராளு மன்ற உறுப்பினர் நளிந்த ஜெயதிஸ்ஸ குற்றம் சுமத்தியுள்ளாா்.
பாராளுமன்றத்தில் இன்று ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் சைட்டம் மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான சட்டமூல திருத்த விவாதத்தின் போது,
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் வடக்கின் இராணுவ ஆக்கிரமிப்புகள் குறித்து உரையா ற்றிக்கொண்டிருந்த வேளையில் வடக்கின் இராணுவ ஆக்கிரமிப்புகள் குறி த்து உரிய முப்படை அதிகாரிகளிடம் காரணம் விட முடியாது.
உள்ளதாகவும், அவர்களிடம் பேச்சுவார்த்தைகளுக்கு நேரம் கேட்டாலும் பாது காப்பு அமைச்சரிடம் அனுமதி பெற்று வருமாறு கூறுவதாக குற்றம் சுமத்தி யுள்ளாா்.
இந்நிலையில் சபையில் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய ஜே.வி.பியின் பாரா ளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜெயதிஸ்ஸ, மிகவும் முக்கியமான குற்றச் சாட் டினை முன்வைத்து சார்ல்ஸ் எம்.பி உரையாற்றி வருகின்றார்.
அதேபோல் தேசிய பாதுகாப்பு விடயம் குறித்து இன்றைய சபையில் விவாதம் இடம்பெற்று வருகின்றது, ஆனால் எதிர்க்கட்சி தரப்பில் முன்வைக்கும் கார ணிகளுக்கோ, எழுப்பும் கேள்விகளுக்கு பதில் தெரிவிக்க பாதுகாப்பு அமைச் சரோ அல்லது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரோ சபையில் இல்லை.
அப்படியாயின் நாம் எமது கேள்விகளை யாரிடம் கேட்பது. ஜனாதிபதியோ அல்லது இராஜாங்க அமைச்சரோ இல்லாது யாரிடம் பாதுகாப்பு குறித்து வினாவுவது ஒரு முக்கியமான விவாதம் நடைபெறுகின்றது.
பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதியோ, இராஜாங்க அமைச்சரோ இல்லாத நிலையில் இந்த விவாதம் நடத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை. பாதுகாப்பு விவகாரத்துடன் தொடர்பு இல்லாத ஒரு அமைச்சர் பதில் கூற முடியாது.
சபையை சமாளிக்க ஒரு சிலர் பதில் கூறினால் அதனை ஏற்றுகொள்ள முடி யாது, தான் பாராளுமன்றதத்திற்கு பொறுப்புக்கூறுவேன் என ஜனாதிபதி வாக் குறுதி கொடுத்துள்ளார்.
ஆனால் உரிய அமைச்சர் என்ற வகையில் அவர் சபையில் இல்லாத நிலைமை மிகவும் மோசமானது எனக் குறிப்பிட்டார்.
இதன் போது சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல பதில் கூறுகையில்:-
உங்களின் குற்றச்சாட்டை நான் மறு க்கவில்லை, நியாயத்தை ஏற்றுக் கொள்கின்றேன். எனினும் உங்களின் கேள்வியை நான் உரிய இடத்திற்கு கொண்டு சேர்ப்பேன் என்ற வாக்குறு தியை கொடுக்கிறேன்.
பாதுகப்பு இராஜாங்க அமைச்சர் வெளிநாட்டு விஜயத்தை மேற்கொண்டுள்ள காரணத்தினால் ஜனாதிபதியிடம் நாம் தெரிவிப்பதாக சார்ல்ஸ் நிர்மலநாதனி டம் தெரிவித்துள்ளாா்.