Breaking News

எஸ்.எம்.இஸ்மாயில் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம்.!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவாவியின் வெற்றிடத்திற்கு எஸ்.எம்.இஸ்மாயில் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவாவி இராஜினாமா செய்ததை அடு த்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கான உறு ப்பினர் ஒருவரை பரிந்துரை செய்யு மாறு தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் கட்சியின் செயலாளருக்கு அறிவித்திருந்தார். 

அதற்கமைய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளரால் பரிந் துரைக்கப்பட்ட எஸ்.எம்.இஸ்மாயில் அந்த பதவி வெற்றிடத்திற்கு நியமிக்கப் பட்டுள்ளார். 

இவரின் நியமனத்துற்கான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. கட ந்த பாராளுமன்ற தேர்தலின் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் அம் பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு சுமார் 33 ஆயிரம் வாக்குகளை எஸ்.எம்.இஸ்மாயில் பெற்றுள்ளாா்.