திருடர் யார் என்பது புதிராகவே உள்ளதாக - மஹிந்த
தேசிய அரசாங்கத்தில் திருடர் யார் என்ற விடயம் புரியாத புதிராகவே உள் ளது. என்னை பார்த்து திருடர் என்று குறிப்பிட்டவர்கள் இன்று தங்களை தாங் களே திருடர்கள் எனக் குறிப்பிடுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோக பூர்வ இல்லத்தில் இன்று இடம்பெற்ற பதவி பிரமாண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ் வாறு தெரிவித்துள்ளாா்.
நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பெறுபேறுகள் தேசிய அர சாங்கத்திற்கு எதிராகவும், பொதுஜன பெரமுனவிற்கு சாதகமாகவும் கிடைக் கப் பெற்றது. ஏனைய தேர்தல் தொகுதிகளின் பெறுபேறுகளை விட மாரஹகம தேர்தல் தொகுதியின் பெறுபேறுகள் முக்கியமானதாகவே காணப்படுகின்றது ஏனென்றால் பொது ஜன பெரமுனவின் வெற்றியை தடுக்க அரசாங்கம் மாஹ ரகம தேர்தல் தொகுதியின் வேட்பு மனுக்களை நிராகரித்தது.
ஆனால் அரசாங்கத்தின் நோக்கம் நிறைவேறவில்லை.
பிணைமுறியுடன் தொடர்புடைய 118 பேரின் விபரங்களை அரசாங்கம் வெளியிடாமல் பல விட யங்களையும் மூடி மறைக்கின்றது.
அரசாங்கமும், அரசியல் கட்சிகளும் இரு வேறு துருவங்களாக தனித்து செயற் பட்டு வருகின்றமை தொடர்பில் எவரும் கவனம் செலுத்தாமல் பிறரின் குறை களை கண்டுப்பிடிப்பதற்கு முழுமையான நேரத்தினை செலவிடுகின்றனர்.
அரசாங்கத்தின் விடயங்களை மக்கள் மத்தியில் அரசியல் கட்சிகள் முறை யாக கொண்டு செல்லாமல் தமது கட்சியின் நலன்கனை மாத்திரம் கருத்திற் கொண்டு செயற்பட்டமையே தேசிய அரசாங்கத்தின் பலவீனத்திற்கு பிரதாக காரணம்.
மறுபுறம் முறையற்ற நிதி முகாமைத்துவம் பின்பற்றாமையின் காரணமாக நாட்டில் அனைத்து துறைகளிலும் வட்டி வீதம் உயர்மட்டத்திலே காணப்படு கின்றது.
முறையற்ற அரசியல் நிர்வாகத்தினை மேற்கொள்ளும் தேசிய அரசாங்கத்தில் ஜனாதிபதி பிரதமரை திருடர் என்பதும், பிரதமர் ஜனாதிபதியை திருடர் என்ப தும் சாதாரண விடயமாகவே காணப்படுகின்றது. ஆனால் தற்போது பாராளு மன்றத்தில் 118 உறுப்பினர்களும் திருடர்கள் எனத் தெரிவித்துள்ளாா்.