சமஷ்டி அமுல்படுத்தப்பட்டால் நாட்டுக்குள் முதலீடுகள் குவியும் - முதலமைச்சர்.!
நாட்டில் சமஷ்டி முறை அமுல் படுத்தப்பட்டால், புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகள் நாட்டுக்குள் குவியும் என்பதை திடமாக நம்பலாம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற திறப்பு விழாவொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும்,
எமது நாட்டின் தொழில் முனைவோ ருக்கு உதவி வழங்கும் சக்திமிக்க மூலமாக புலம் பெயர் தமிழர்கள் விளங்கு கின்றனர். இந்நிலையில், அவர்களின் முன்னேற்ற பாதையில் தடைகள் ஏற் படுத்தப்படாது என்ற உத்தரவாதத்தை அரசாங்கம் வழங்க வேண்டும்.
அவர்களுக்கு எதிராக அரசாங்கம் பாகு பாடு காட்டினால், எமது மக்களுக்கு உதவி செய்யும் அவர்களின் முயற்சி திரும்பப் பெறப்படும்.
அரசாங்கமும், அரச திணைக்களங்களும் எவ்வாறு தடைகளை ஏற்படுத்தியது என்பதற்கு முதலமைச்சர் நிதியம் ஒரு சிறந்த உதாரணமாகும்.
முதலமைச்சர் நிதியத்திற்கான அனுமதி தொடர்ந்தும் அரசாங்கத்தினால் கிட ப்பில் போடப்பட்டுள்ளமையால், வெளிநாடுகளிலிருந்து எமது பகுதிகளுக்கு கிடைக்க வேண் டிய உதவிகளும் மறுக்கப்பட்டுள்ளன.
உள்ளூர் பொறிமுறை காரணமாக கனடாவிலிருந்து எமக்கு கிடைக்க வேண் டிய பணம் இன்னும் கிடப்பில் கிடக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது எனத் தெரிவித்துள்ளாா்.