Breaking News

சில மணி நேரத்தில் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை.!

பிறந்த குழந்தை இறந்து விட்டதாக நினைத்து அடக்கம் செய்த பின்னர் பரி சோதனைக்காக மீண்டும் தோண்டி எடுக்கப்பட்ட வேலையில் குழந்தை உயி ருடன் இருந்த சம்பவம் பிரேஸில் நாட்டில் நடைபெற்றுள்ளது.

பொலிஸார் குறித்த குழந்தையினை தோண்டி எடுக்கும் போது அழுகுரல் ஒன்று கேட்கப்பட்டுள்ளது. குழந்தை 50cm ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்த தாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்திய வம்சாவளியினை சேர்ந்த 15 வயதுடைய இந்திய பெண் குளியல றையில் குளித்துக்கொண்டிருக்கும் வேளை குறித்த குழந்தையினை பிரசவித் துள்ளார். 

குறித்த குழந்தை கிடைக்கும் போது குழந்தையின் தலை நிலத்தில் அடிபட்டு விட்டாத பொலிஸாரிடம் அப்பெண் தெரிவித்துள்ளார். அதன்பின் குறித்த குழ ந்தைக்கு எவ்வித சிகிச்சையும் அளிக்காது, குழந்தை இறந்து விட்டதாக நினை த்து தன் தாயிடம் தெரிவித்த நிலையில், குறித்த பெண்ணின் தாயும் குழந்தை இறந்து விட்டதாக பரிசோதித்து உறுதிப்படுத்தி குழந்தையை புதைத்ததாக பொலிஸாரிடம் குழந்தையின் தாய் தெரிவித்துள்ளார். 

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த குழந்தை உடலாரோக் கியத்துடன் இருப்பதாகவும், பெண்ணின் தாய் பொலிஸாரால் கைது செய்யப் பட்டுள்ளாா்.