ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாப்பதே ஒரே நோக்கமா?
தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றப் பதவிகளைத் தமதாக் கிக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் இலக்கு என்ன என்பதை அவசரமாக ஆராய வேண்டிய தேவை தமிழ் மக்களிடம் எழுந்துள்ளது.
கடந்த ஐந்தாம் திகதி பாராளுமன்றத்தில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கள் நடந்து கொண்ட விடயத்தை பெரும்பா லான ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்து விட்டன.
அதிலும் குறிப்பிட்ட சில ஊடகங்கள் தம் மால் முடிந்த அளவுக்கு அச் சம்பவத்தை அப்படியே விழுங்கி விட்டதைப் பார்க்க முடியும்.
ஆனால் இலங்கைப் பாராளுமன்றத்தில் நடந்த இச் சம்பவம் தமிழினத்துக்கு இழுக்கைத்தரக் கூடியது மட்டுமன்றி தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற செய லாகவும் அமைந்துள்ளது.
கடந்த ஐந்தாம் திகதி பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் தெரிவு இடம் பெற் றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பிலும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பிலும் இரு வர் பிரதி சபாநாயகர் பதவிக்காகப் போட்டியிடுகின்றனர்.
இதன்போது கருத்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தர் அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்ந்தவரையே பிரதி சபாநாயக ராகத் தெரிவு செய்ய வேண்டும்.
ஏனெனில் தற்போது சபாநாயகராக இருப்பவர் ஐக்கிய தேசியக் கட்சி சார்ந்த வர் என்ப தால் பிரதி சபாநாயகர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவராக இருப்பதுதான் நியாயம் என்றார்.
எனினும் இரா.சம்பந்தரின் கருத்தை அவரின் தலைமையிலான கூட்டமைப் பின் பாராளுமன்ற உறுப்பினர்களே ஏற்றுக் கொள்ளாமல் வெளிநடப்புச் செய்தனர்.
இங்கு யாரை ஆதரிப்பது என்பதற்கு அப் பால், பிரதி சபாநாயகர் தெரிவு நடை பெறப் போகிறது எனும்போது, யாரை பிரதி சபாநாயகராகத் தெரிவு செய்வது என்ற முடிவை கூட்டமைப்பினர் கூடி எடுக்கவில்லையா?
என்பது தான் இங்கு நோக்குதற்குரிய விடயமாகும்.
பிரதி சபாநாயகர் தெரிவு இடம்பெறப் போகிறது. அதில் வாக்களிப்பது அல்லது வெளிநடப் புச் செய்வது என்ற முடிவை ஏலவே கூட்டமைப்பு எடுத்திருக்க வேண்டும்.
ஆனால் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம் பந்தர் அவர்கள் ஸ்ரீலங்கா சுதந் திரக் கட்சி சார்பில் பிரதி சபாநாயகர் பதவிக்குப் போட்டியிடும் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்சினி பெர்னாண்டோவை ஆதரிக்க வேண்டுமெனக் கூறுகி றார்.
ஆனால் அதேநேரம் இரா.சம்பந்தரின் கருத்தை தூக்கி எறிந்து விட்டு கூட் டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளி நடப்புச் செய்கின்றனர்.
இவ்வாறு வெளிநடப்புச் செய்வது என்ற முடிவை கூட்டமைப்புக்குள் எடுத்தது யார்? என்ற கேள்வியினூடு பலத்த சந்தேகங்கள் முன்னெழுந்துள்ளன.
வெளிநடப்புச் செய்வது என்ற தீர்மானத்தை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் எடுத் திருந்தால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஆதரிப்பதாக ஒருபோதும் தெரிவித்திருக்க மாட்டாா்.
ஆகவே வெளிநடப்புத் தீர்மானம் கூட்டமைப் பின் இன்னொரு தலைவரால் எடுக்கப்பட்டுள் ளது என்பது உறுதியாகிறது.
ஆக, தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பு ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிப்பதிலேயே தனது முழுக் கவனத்தையும் செலுத்துகிறது என்பது மட்டும் சர்வ நிச்சயம்.
இதனை இரா.சம்பந்தர் எதிர்க்கிறார் என்ற கோணத்திலும் பார்க்க வேண்டி யுள்ளது.