Breaking News

"மங்கள சமரவீரவுடன் விவாதம் செய்யத் தகுதியில்லை"

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுடன் விவாதம் செய்ய வேண்டிய தேவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இல்லை. மஹிந்த ராஜபக்ஷவு டன் விவாதம் செய்ய மங்களவுக்கு எந்தவொரு தகுதியும் இல்லை என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சேஹான் சேமசிங்க தெரிவித் துள்ளாா்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக் கிழமை நிதி அமைச்சின் மதுவரி கட் டளை சட்டத்தின் கீழ் அறிவித்தல் மீதான விவாதத்தின் போது நிதி மற் றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தனது உரையின் போது மஹிந்த ராஜ பக்ஷவை விவாதத்திற்கு அழைத்தி ருந்தார். இந்த அழைப்பு பதிலளிக்கும் வகையில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளாா்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், 

தற்போது நாடு ஸ்திரமற்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக நாடு வீழ்ச்சி கண்டு வருகின்றது. தற்போதைய பாராளுமன்றம் திரிபுப் படுத்தப்பட்டுள்ளது. ஆகவே இனிமேலும் இந்த பாராளுமன்றத்தினால் பயணி க்க முடியாது. ஆகவே உடன் பராளுமன்றத்தை கலைத்து புதிய பாராளுமன் றத்தை கூட்ட வேண்டும். 

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாம் ஆட்சிக்கு வந்தால் 20 வீத வரி குறைப்பை செய்வதாக கூறியுள்ளார். ஆகவே இதற்கு பதிலளித்து பொருளாதாரம் மற்றும் வரி கொள்கை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விவாதத்திற்கு வருமாறு நிதி அமைச்சர் மங்கள சமரவீர சவால் விடுத்திருந்தார். 

மங்கள சமரவீரவுடன் விவாதம் செய்ய வேண்டிய தேவை அவருக்கு இல்லை. மஹிந்த ராஜபக்ஷவுடன் விவாதம் செய்வதற்கு மங்கள சமரவீரவிற்கு எந் தவொரு தகுதியும் இல்லை எனத் தெரிவித்துள்ளாா்.