Breaking News

அரசியல் வங்குரோத்து காரணமாகவே சி.வி இனவாதத்தை தூண்டுவதாக - ராஜித சேனா­ரத்ன

வடக்கு முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் அர­சியல் வங்­கு­ரோத்து நிலையை அடைந்­து­வ­ரு­கின்றார். அதில் இருந்து மீள்­வ­தற்கே இன­வா­தத்தை தூண்­டும்­வ­கை­யி­லான பிர­சா­ரங்­களை மேற்­கொள்­கிறார் என அமைச்­சரும் அமைச்­ச­ரவை இணைப்­பேச்­சா­ள­ரு­மான ராஜித சேனா­ரத்ன தெரி­வித்துள்ளாா்.

அமைச்­ச­ரவை தீர்­மா­னங்­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் இடம்­பெற்­றது. இதில் ஊட­க­வி­ய­லா ளர் ஒரு­வ­ரினால் கேட்­கப்­பட்ட கேள்­வி­யொன்றுக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அமைச்­ச­ரவை பேச்­சாளர் இவ்­வாறு தெரிவித்துள்ளாா். 

தொடர்ந்து கூறு­கையில்,

வட­மா­காண முத­ல­மைச்­சரின் பேச்சு அர­சாங்­கத்தின் கொள்­கைக்கு மாத்­தி­ர­மல்ல தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் கொள்­கைக்கும் விரோ­த­மா­ன­தாகும். அர­சியல் வங்­கு­ரோத்து நிலையை அடையும் அனைத்து அர­சி­யல்­வா­தி­களும் இறு­தி­யாக மத, இன­வா­தத்­தையே தூக்­கிப்­பி­டிப்­பார்கள்.

அவ்­வாறே சீ.வி. விக்­கி­னேஸ்­வ­ரனும் தற்­போது இன­வா­தத்தை தூண்­டும்­வ­கையில் பிர­சா­ரங்­களை நடத்­தி­வ­ரு­கின்றார். இந்­தி­யாவில் இந்த நிலை இல்லை. அங்கு அனைத்து இனங்­க­ளுக்கும் சம அந்­தஸ்து வழங்க நேரு பிர­த­ம­ராக இருக்கும் போதே பிர­சா­ரம்­செய்து வந்தார்.

எமது நாட்டில் அது நடை­பெ­ற­வில்லை.

கேள்வி
விக்­கி­னேஸ்­வரன், சிவா­ஜி­லிங்கம் ஆகி­யோரின் பேச்­சுக்கள் வடக்கில் இளை­ஞர்­களை மீண்டும் யுத்­தத்­துக்கு தூண்­டும்­வ­கையில் இருக்­கின்­ற­னவே? 

பதில்
இவர்கள் என்­னதான் தெரி­வித்­தாலும் பயங்­க­ரவாதம் தற்­போது முடி­வ­டைந்­துள்­ளது.

கேள்வி
 இவர்­களின் வாயை அடைக்க அர­சாங்­கத்­துக்கு முடி­யாதா?

பதில்
வாய்­களை அடைத்து இதனை தடுக்க முடி­யு­மாக இருந்தால் இன்னும் பல­ரது வாய்­களை அடைக்­க­ வேண்டும்.

அதற்­கா­கத்தான் இன­வாத்தை தூண்டுபவர்களுக்கு எதிரான சட்டமூலத்தை நாங்கள் கொண்டுவர முயற்சித்தோம். ஆனால் அதனை கொண்டுவர இட மளிக்கவில்லை. இன, மதவாங்களை தூண்டுவதை தடுப்பதாக இருந்தால் அந்த சட்ட மூலத்தை கொண்டு வரவேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.