Breaking News

ரஜினியின் காலா திரைப்படத்திற்கு தடை விதிக்க சுவிஸ் வாழ் தமிழா்கள் தீர்மானம்.!

தூத்துடிக்குடியில் ஸ்டெறிலைட் ஆலையை மூடுக்கோரி போராட்டம் மேற் கொண்ட மக்களை தீவிரவாதிகள் என ரஜினிகாந் ஊடகவியலாளர்களிடம் கூறியதைத் தொடர்ந்து, ரஜினிகாந் நடித்து செளி வருகின்ற 'காலா' என்ற திரைப்படத்தைப் புறக்கணிப்பதற்கு நோர்வே வாழ் தமிழர்கள் தீர்மானம் எடுத் துள்ளாா்கள். 

அதேபோன்று சுவிஸ்சலாந்து வாழ் தமிழர்களும் 'காலா' திரைப்படத்தைப் புறக்கணிப்பது என்று தீர்மாணம் எடுத் துள்ளார்கள். காலா திரைப் படத்தை தமிழ் மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்ற பிரச்சாரங்கள் சமூகவலைத் தளங்கள் வழியாகவும், குறுஞ் செய் திகள் ஊடாகவும் மும்முரமாக . முன் னெடுக்கப்பட்டுள்ளன. 

அதேவேளை எப்படியாவது காலா திரைப்படத்தை வெளியிட்டேயாகுவோம் என்று தெரிவிக்கும் வெளியீட்டாளர்கள் தமிழ் மக்கள், குறிப்பாக ரஜினி ரசிகா் திரைப்படத்தை வெற்றி பெறவைப்பார்கள் என்ற நம்பிக்கையை தெரிவித்துள் ளார்கள்.