முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான கலந்துரையாடல் சி.வி அலுவலகத்தில் ஆரம்பம்.!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பிலான கலந்துரையானலொன்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் முத லமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றுக்கொண்ருக்கின்றது.
இக்கலந்துரையாடலில் மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம், மாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள், பொது அமை ப்புக்களின் பிரதி நிதிகள் பலரும் கல ந்துள்ளனர்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்ன ரும் முதலமைச்சர் தலைமையில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.
இதன்போது, முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை மாகாண சபையின் ஏற்பாட்டில் நடத்துவதென தீர்மானிக் கப்பட்டது.
அத் தீர்மானத்துக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எதிர்ப்பு தெரி வித்தது.
இதனையடுத்து இன்று இடம்பெறும் கலந்துரையாடலில் யாழ். பல் கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதி நிதிகளை கலந்து கொள்ளுமாறு முதல மைச்சர் தெரிவித்திருந்தார்.
எனினும், தற்போது ஒன்றிய பிரதிநிதிகள் கலந் துரையாடலில் கலந்து கொள்ளவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.