Breaking News

கிழக்கின் அடுத்த தமிழ் தலைவர் யார்?

கிழக்கு மாகாணத்தின் அடுத்த தலைவர் யார்? என்ற தேடல் பரவலாக எழுந் துள்ளது. தலைவர்கள் இல்லாத தேசமாகவா கிழக்கு மாகாணம் இன்று வரை இருந்தது? என்ற கேள்வியும் இதில் இருந்து எழுகின்றது. 

உண்மையில் கிழக்கில் உள்ளவர்கள் தலைவர் களை அரசியல் கட்சிகளை மையப்படுத்தியே தேடுகின்றனர். அதுவும் ஒரு தேர்தல் களம் திறக்கப்படும் போது தலைவர்களை தேடுவ தும், பின்னர் அது குறித்து சிந்திப்பதே இல்லை. 

அடுத்து வரும் தேர்தலுக்கு மீண்டும் தலைவர்களை தேடுவார்கள். உண்மை யில் பல ஆயிரம் தலைவர்கள் கிழக்கில் உள்ளார்கள். கிழக்கில் உள்ள தலை வர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்க யாரும் முன்வரவில்லை. குறிப்பாக இங்குள்ள கட்சிகள் புதிய தலைமைகளை உள்வாங்குவதற்கோ அரவணைத்து செல்வதற்கோ விரும்பவில்லை.

✪  சம்பந்தன் ஐயா பற்றி கூறினால்,

அவர் தலைவர் பிரபாகரன் அவர்களின் காலத்திற்கு முந்தைய தலைவர். அவர் ஒருவரை நம்பியே இன்று கிழக்கில் உள்ள பல தலைவர்கள் கிழக்கை முதன்மைப்படுத்தி வருகின்றனர். ஆனால் கிழக்கு அவர் இருப்பதற்கான பலா பலன்களை அடைந்துள்ளதா? என்பது ஆராயப்பட வேண்டியுள்ளது.

👉 அடுத்து சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்),

கிழக்கு முதலமைச்சராக இருந்த போது கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட அபி விருத்தியை மட்டும் கருத்தில் கொண்டு அவரை ஒரு தலைவராக மக்கள் ஏற்க விரும்பவில்லை. அவரது அரசியல் சித்தாந்தம், அவர் கிழக்கு மாகாண த்தில் செய்திருக்க வேண்டிய இன்னும் பல விடயங்கள் குறித்த செயற்பாடு களில் உள்ள விமர்சனங்கள். மற்றும் அவர் மீதுள்ள குற்றச்சாட்டு அவரது தலைமைத்துவம் குறித்து கேள்விகளையே தோற்றுவித்துள்ளது.

👉  விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா)

இவருடைய தலைமைத்துவம் குறித்து தமிழ் மக்கள் தொடர்ந்தும் சந்தேக கண் கொண்டே பார்க்கின்றனர். குறிப்பாக இவர் தொடர்ந்தும் மகிந்த ராஜபக்ச சார்பு அரசியலை முன்னெடுப்பது தமிழ் மக்கள் இவரை புறக்கணிக்க ஒரு காரணமாக உள்ளது.

இது இன்று வரை கிழக்கில் தலைவர்கள் என்று குறிப்பிடப்பட்டவர்கள் குறித்த சுருக்கம். ஆனால் கிழக்கு மாகாண தமிழர்கள் தலைவர்களை உருவாக்க விரும்பவில்லை அல்லது தலைவர்களை தலைவர்களாக ஏற்க தயாராக இல்லை என்பதே உண்மை. இதன் காரணமாகவே தலைவர்களை தேடுகி றார்கள்.

கட்சிகள் தலைவர்களை உருவாக்க தவறியுள்ளது மாவை சேனாதிராசா போன்ற தலைவர்கள் இளைஞர் அணியில் இருந்து அடையாளம் காணப்பட்டு வந்தவர்கள். ஆனால் அதே கட்சியின் இளைஞர் அணியில் இருந்து கிழக்கில் எத்தனை தலைவர்கள் உருவாகி இருக்கிறார்கள். 

தலைமைகள் உருவாகுவதற்கான களம் கடந்த முப்பது வருடங்களாக தமிழீழ விடுதலைப் புலிகளின் கைகளில் இருந்தது. அவர்கள் இராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பல தளபதிகளை தலைவர்களை உருவாக்கி இருந்தனர். அதேநேரம் பல மாற்று தலைமைகளும் அவர்களால் இல்லாமல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்டு. 

ஆனால் தமிழர்களுக்கான இயங்கு சக்தியாக இருந்த தமிழீழ விடுதலைப் புலி களின் நிர்வாகத்தில் பல தலைவர்கள் நிர்வாக ஒழுக்கம் ஆளுமை மிக்க தலை வர்கள் உருவாக்கப்பட்டிருந்தார்கள். 

அவர்களில் சிலர் இப்போதும் இருக்கிறார்கள், அவர்களுக்கு வாய்ப்பு வழங் கப்பட வேண்டும். உங்களுக்கான வாய்ப்பும் களமும் அமையுமாக இருந்தால் நீங்கள் ஒவ்வொருவரும் தலைவர்கள் தான். ஆனால் அதற்கான வாய்ப் பையோ, களத்தையோ எக் கட்சியும் ஏற்படுத்தி கொடுத்ததாக தெரிய வில்லை. 

அரசியலும், அதிகாரமும் அடிமட்ட மக்கள் வரை எடுத்துச் செல்லப்பட வேண் டும். தலைவர்கள் நகர் புறத்தில் இருந்து பணியாற்றுவது கைவிடப்பட வேண் டும். சிவில் சமூகம், பொது அமைப்புக்கள் ஏன் அரச உத்தியோகத்தில் பல தலைவர்கள் இருக்கின்றார்கள் அவர்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

மாணவர்கள் மத்தியில் பல எதிர்கால தலைவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும். முதலில் அனைவரும் அரசியல் களப் போராளி களாக மாற வேண்டும். 

தெருமுனை பிரச்சாரம், துண்டு பிரச்சாரம் விழிப்புணர்வு பிரச்சாரம் என பல நுட்பங்களுடன் எங்களுக்கான அரசியலை எங்களுக்கான கோரிக்கைகளை மக்கள் மத்தியில் எடுத்து செல்ல அரசியல் போராளிகள் உருவாக்கப்பட வேண்டும். 

இவற்றை இன்று வரை ஒரு அரசியல் கட்சியும் செய்ய வில்லை, இனியும் செய்ய மாட்டார்கள். தலைவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு பயி ற்சி கொடுத்து அவர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்து அவர்களை வளர்த் தெடுப்பதற்கு ஒரு பொது அமைப்பொன்று கிழக்கில் முன்வர வேண்டும். இது எதிர்காலத்தில் தலைவர்களை தேடுவதில் இருந்து தமிழர்களை பாதுகாக்கும்.

👉  கிழக்கு மாகாணசபை!

உடனடியாக வரவிருக்கும் கிழக்கு மாகாண சப தேர்தலில் யாரை முதலமைச் சராக தமிழர்கள் தேர்ந்தெடுப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. இது அனைத்து தமிழ் மக்கள் மத்தியில் கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும் கிழக்கு முதலமைச்சர் வேட்பாளர் ஒருவரை கிழக்கில் உள்ள எந்தக் கட்சியாலும் முதன்மைப்படுத்த முடியாத சூழ்நிலையே உள்ளது. வடக்கில் உள்ள கட்சிகள் முதலமைச்சர் வேட்பாளரை முன்வைத்து தேர்தலில் குதிக்க முடியும். 

ஆனால் வடக்கை போன்று கிழக்கில் உள்ள தமிழ், முஸ்லிம், சிங்கள கட்சி களினால் முதலமைச்சர் வேட்பாளரை முன் நிறுத்தி தேர்தலில் போட்டியிட முடியாது. காரணம் கிழக்கில் எந்தக் கட்சியாலும் கிழக்கு முதலமைச்சரை நியமிப்பதற்கான அறுதிப்பெரும்பான்மையை பெறமுடியாது. 

இவ்வாறான சூழ்நிலையில் முஸ்லிம் கட்சிகளுடனோ அல்லது சிங்கள கட்சி களுடனோ இணைந்தே முதலமைச்சரை தெரிவு செய்யமுடியும் என்பதால் இவர் தான் கிழக்கில் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை யாரும் முன் நிறுத்த முடியாது. 

இதன் காரணமாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் உடன் இணங்கி போகிறது. கடந்த முறை முஸ்லிம்களு க்கு முதலமைச்சர் பதவியை தாரைவார்த்து கொடுத்தார்கள். இந்த முறையும் அவ்வாறே நடைபெறும். 

இந்த முறை முதல் இரண்டு வருடம் தமிழர் ஒருவரையும் அடுத்து இரண்டு வருடங்கள் முஸ்லிம் ஒருவரையும் முதலமைச்சராக நியமிப்பார்கள் என் பதே எனது கணிப்பு. இம்முறை கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசி யக் கூட்டமைப்பு சார்பாக அரியநேத்திரன், துரைராஜசிங்கம், பொன் செல்வராசா, கோவிந்தன் கருணாகரன், பிரசன்னா, என அனேகமாக பழைய முகங்களே இறங்க வாய்ப்புள்ளது. 

அதிலும் பொன். செல்வராசா அவர்களை முதலமைச்சராக நியமிக்க கட்சியில் பலருக்கு விருப்பம் உண்டு ஆனால் அதற்கு செயலாளர் துரைராஜசிங்கம் அவ ர்கள் அனுமதிக்க மாட்டார். எல்லாவற்றுக்கும் மேலாக தேர்தலில் மக்கள் யாரை தேர்ந்தெடுப்பார்கள் என்பதை பொறுத்தே அடுத்த கட்டம் பற்றி சிந்திக்க முடியும். நிலமை இவ்வாறு இருக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இம்முறை புதிய தலைவர்களுக்கு வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. 

எனவே புதிய தலைவர்களை தேடுபவர்கள் அல்லது புதியவர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்க விரும்புகிறவர்களுக்கு இரண்டு வாய்ப்புக்கள் உண்டு. ஒன்று - கிழக்கில் முதலமைச்சரை கொண்டு வருமளவுக்கு பெரும்பான் மையை பெறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சியை மறு சீரமைப்புச் செய்ய வேண்டும். 

குறிப்பாக தமிழரசுக் கட்சியை அவ்வாறு மறுசீரமைப்பு செய்தால் மாத்திரமே கிழக்கில் கட்சியில் இருந்து ஒதுங்கி நிற்கும் ஆதரவாளர்களை ஒருங்கிணை க்க முடியும். அடுத்து புதிய தலைமைகள் மற்றும் இளைஞர்கள் கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடும் வகையில் இடம் வழங்கப்பட வேண் டும். 

இதை செய்ய தவறும் பட்சத்தில் கிழக்கு தமிழர்களின் வாக்குகள் மேலும் சித றும். அப்படி சிதறுமாக இருந்தால் அது முஸ்லிம் சமூகத்திற்கு வாய்ப்பாக அமையும். ஆனால் சுமந்திரன் போன்றவர்கள் கிழக்கை முஸ்லிம்கள் ஆள வேண்டும் என்றே விரும்புகின்றனர். 

அதன் வெளிப்பாடு தான் அவரது மேதின உறை. இவ்வாறான நிலையில் கிழக்கில் தலைவர்களை கோடிட்டு காட்டும் அளவுக்கு அரசியலில் வளர்ச்சி அடையவில்லை. கிழக்கில் உள்ள தலைவர்களை வெளிக்கொண்டு வரும் வேலைத் திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும். 

இலை மறை காயாக ஒதுங்கி நிற்கும் தலைவர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்து அவர்களை களத்தில் இறக்கி எதிர்காலத்தில் அரசியலில் பயணிக்க இன்றே தயாராகுங்கள். 

- நன்றி -ஐ.பி.சி-