விடுதலைப்புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன? - தலைவர் உள்ளார் என்கிறார் பழ.நெடுமாறன் ( பகுதி - 2 )
பகுதி - 1
👉. இந்தியா செய்தது என்ன?
அப்படியென்றால் அவர்களுடைய இருத்த மாதிரி பெறப்பட்டு சோதனை மேற்கொண்டிருக்க வேண்டுமல்லவா?
👉. சர்வதேச சூழல்கள் மாற வேண்டியுள்ளது
இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம்
மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாள ரும் உலகத்தமிழர் பேரவையின் ஸ்தா பரும் ஈழத்தமிழர் விடயத்தில் நீண்ட அனுபவம் கொண்டவரும் தமிழர் தேசிய முன்னணியின் தலைவரும் எழு த்தாளருமான பழ.நெடுமாறனுடன் இல ங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியா வின் கரிசனைப் போக்கு, சமகால அரசி யல் நிலைமைகள், ராஜீவ் காந்தி மரண த்தின் பின்னணி, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைக்கு என்ன நட ந்தது?
உள்ளிட்ட பல விடயங்கள் குறித்த அவருடைய அலுலகத்தில் நடைபெற்ற பிர த்தியேக சந்திப்பின்போது கலந்துரையாட முடிந்தது. இதன்போது அவர் விளக்கமளித்து முன்வைத்த கருத்துக்கள் வருமாறு,
உள்ளிட்ட பல விடயங்கள் குறித்த அவருடைய அலுலகத்தில் நடைபெற்ற பிர த்தியேக சந்திப்பின்போது கலந்துரையாட முடிந்தது. இதன்போது அவர் விளக்கமளித்து முன்வைத்த கருத்துக்கள் வருமாறு,
👉. ராஜீவ் காந்தியின் மரணம் இந்தியாவை மாற்றியதா?
நான் அந்தக் குடும்பத்துடன் நெருக்கமாக பழகியவன் என்ற அடிப்படையில் ராஜீவ் காந்தியின் மரணம் என்பது மிகவும் வருத்தத்திற்கு உரியதான விடயம். ஆனால் ராஜீவின் படுகொலைக்கும் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கும் எவ் விதமான தொடர்பும் இல்லை என்பதை உறுதியாக என்னால் சொல்ல முடி யும்.
ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது பதவியில் இருந்திருக்கவில்லை.
அக் கால ப்பகுதியில் விடுதலைப்புலிகள் ராஜீவினை சந்திப்பதற்கு விரும்பினார்கள். நானே நேரடியாக அதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தேன். இந்த சம யத்தில் விடுதலைப்புலிகள் சார்பில் காசி ஆனந்தன் ராஜீவ் காந்தியை நேரில் சந்திக்கின்றார்.
அச்சமயத்தில் அவர் பல்வேறு தெளிவுபடுத்தல்களை வழங்கியிருந்தார். குறிப் பாக குமரப்பா புலேந்திரன் உள்ளிட்டவர்கள் சென்னை சென்று தங்களது அலு வலகத்தில் சில ஆவணங்களையும் பொருட்களையும் எடுக்க வேண்டியி ருந்தது.
இவ் விடயத்தினை திபீந்தர் சிங்கிடத்தில் தெரிவித்து விட்டே தமிழகத்திற்கு வந்தனர். இதனை எவ்வாறோ அறிந்த தீட்சித் இலங்கை இராணுவத்திற்கு தக வல் வழங்கி விட்டார். அத்துடன் தீட்சித் இவர்களின் பயணம் தனக்கு அறி விக்கப்படவில்லை என்றும் கை விரித்தமையால் ஈற்றில் அவர்கள் மரண மடைய வேண்டியேற்பட்டது.
இதனால் தான் விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் இடை யில் மோதல்கள் உருவாக வேண்டிய நிலைமைகள் எழுந்தன.
அதனை தவிர விடுதலைப்புலிகள் இந்திய இராணுவத்துடன் மோதவேண்டிய எந்தவொரு சூழலும் ஏற்பட்டிருக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
இதனை ஆழமாக கேட்டுக்கொண்டிருந்த ராஜீவ் காந்தி “பிரபாகரனிடம் கூறு ங்கள் தவறு நடைபெற்றுவிட்டது. எனக்குத் தெரியாது அந்தத் தவறு இழைக் கப்பட்டு விட்டது. தற்போது தேர்தல் நடைபெறப்போகின்றது. இதில் அதிகாரத் திற்கு நானே வரப்போகின்றேன்.
வந்தவுடன் புலிகளுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் நான் வழங்கு வேன் என்பதை பிரபாகரனிடத்தில் உறுதியாக கூறுங்கள்” குறிப்பிட்டார். இதனை காசி ஆனந்தன் என்னிடத்தில் கூறினார். அந்த தகவல் பிரபாகர னுக்கும் அனுப்பப்பட்டது.
இதனடிப்படையில் பார்க்கின்றபோது பதவியில் இல்லாத ஒருவரையும் எதிர் காலத்தல் தமக்காக செயற்படப் போவதாக வாக்குறுதி அளித்த ஒருவரையும் கொலை செய்யவேண்டிய அவசியம் விடுதலைப்புலிகளுக்கு ஏற்படாது. அதன் காரணத்தால் ராஜீவ் கொலை வழக்கில் 26 பேருக்கு வழங்கப்பட்ட தூக் குத் தண்டனை தீர்ப்பு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து வாதாடும் சட்டத்தரணிகள் குழுவுக்கான நிதி சேகரிக்கும் குழுவிற்கு தலைமை தாங்கினேன்.
அந்த வழக்கு பொய்யானது என நிரூபிக்கப்பட்டு அதில் 19 பேர் விடுதலையாக் கப்பட்டுள்ளனர்.
அந்த வழக்கின் தலைநீதிபதி கே.டி.தோமஸ், இந்தியாவின் பிரதமரை படுகொலை செய்த வழக்கில் யாரையும் தண்டிக்காது விட்டால் தவ றாகி விடும் என்பதால் தவறிழைத்து விட்டேன் என்று கருத்து வெளியிட்டுள் ளார்.
அதேபோன்று இந்த கொலை வழக்கின் மத்திய புலனாய்வுத்துறை அதிகாரி வி.தியாகராஜன், வாக்குமூலத்தினை திருத்தி எழுதியாக குறிப்பிடுகின்றார். இதனைவிடவும் ராஜீவ் கொலையின் பின்னணி சதி இருக்கின்றதா என்பது தொடர்பில் ஆராய கூட்டு ஆணைக்குழுவும் நியமிக்கப்பட்ட போதும் தற்போது வரையில் அவர்கள் எவ்விதமான அறிக்கையையும் வெளியிடவில்லை.
தற்போது ராஜீவ் கொலைவழக்கு விசாரணை சிறப்பு புலனாய்வுக்குழு தலை வராக செயற்பட்ட கார்த்திகேயன் உண்மையான குற்றவாளிகளை மறைத்து விட்டதாக குற்றச்சாட்டுள்ளதால் கூட்டு ஆணைக்குழு விசாரணை செய்வ தாக கூறியுள்ளது. ஆனால் இன்னமும் முடியவில்லை.
ராஜீவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதாக கூறப்படுகின்றவர்களின் ஒருவர் வீட்டுத்தரகரான ரங்கநாத்.
சிவராஜன் ரங்கநாத்தை சந்தித்து வீடு வாடகைக்கு தேவை எனக் கோரியதனையடுத்து இருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. சிவராஜன் டெல்லிக்குச் சென்றபோதும், சந்திரசாமியைச் சந்திக்கச் சென்ற போதும் ரங்கநாத் சென்றுள்ளார்.
ரங்கநாத்தை கைது செய்தபோது இந்த விடயங்களை அவர் கூறியுள்ளார். இரு ப்பினும் கார்த்திகேயன் அவரை தாக்கி வாக்குமூலம் பெற்றுள்ளார் என்பதை ரங்கநாத்தே கூறியுள்ளார்.
இவ் விடயங்கள் தொடர்பில் இதனை ‘த வீக்’ என்ற பத்திரிகை கார்த்திகேயனிடத்தில் கேள்வி எழுப்பியபோது அவர் கடுந்தொ னியில் சத்தமிடவும் அக்கருத்துகள் அனைத்தையும் உள்ளடக்கிய முழுமை யான கட்டுரையொன்றை வெளியிட்டது.
அந்த பத்திரிகை சோனியா கந்தியின் பார்வைக்குச் செல்லவும் அதிர்ச்சி யடை ந்த அவர் அமைச்சராக இருந்த அர்ஜுன்சிங்கிடத்தில் ரங்கநாத்தை பார்க்க வேண்டும் என்று சோனியா காந்தி கூறியுள்ளார். அர்ஜுன் சிங் உடனடியாக ரி.ஆர்.தங்கபாலுவிடத்தில் தகவல் தெரிவிக்கவும் அவர் என்னை வந்து சந்தி த்தார்.
காரணம் ரங்கநாத் என்னுடைய அலுவலகத்தில் தான் தங்கியிருந்தார். அச் சமயத்தில் ரங்கநாத்தின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தினால் அவரை அனுப்ப தயார் என்று நான் கோரவும் உடனடியாக ரங்கநாத்துக்கு பொலிஸ்பாதுகாப்பு வழங்குவதாக பகிரங்க அறிவிப்பனை அர்ஜுன் சிங் விடுத்தார்.
இதனையடுத்து பொலிஸ் பாதுகாப்புடன் சோனியா காந்தியை ரங்கநாத் சந்தித் தார். தனக்கு நிகழ்த்தப்பட்ட சித்தவதைகள் உட்பட தனது குடும்பத்தை புல னாய்வு அதிகாரிகள் சிதைத்தது வரையில் அனைத்தையும் கூறி அழுதுள் ளார்.
இதனால் சோனியா காந்தி எங்கோ தவறு நடந்திருக்கின்றது என்பதை உணர் ந்து கொண்டதோடு தனது கணவரின் கொலைசம்பவத்தை கண்டறிந்த வர் என்ற வகையில் கார்த்திகேயன் மீது வைத்திருந்த மரியாதையை தாண்டி அவரை சந்திப்பதையும் தவிர்க்கலானார்.
இதுவொரு பக்கமாக இருக்கையில் ராஜீவ் மரணமடைந்த சந்தர்ப்பத்தில் இந்தியாவுக்கு வருகை தந்திருந்த யசீர் அரபத், ராஜீவுக்கு எதிராக சர்வதேச சதி உள்ளது. ஆகவே கூட்டமான பகுதிகளுக்குள் செல்லவேண்டாம் என அவரை எச்சரித்திருந்தேன் என்று பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார்.
அவ்வாறு யசீர் அரபத் தெரிவித்திருந்த நிலையில் அவரிடத்தில் கார்த்தி கேயன் விசாரணை நடத்தியிருக்க வேண்டுமல்லவா? ஆனால் அதனை கடை வரையில் செய்யவில்லையே. மேலும் ரங்கநாத்திடம் சித்திரவதை வாக்கு மூலத்தினை பெற்றுக்கொண்டாலும் சந்திரசாமியிடத்தில் விசாரணை செய்ய வில்லையே.
அவ்வாறான நிலையில் விடுதலைப்புலிகள் மீது எவ்வாறு குற்றச் சாட்டுக் களை சுமத்த முடியும்?
இன்றும் அன்றும் தற்போது காவிரிமேலான்மை வாரியம் அமைக்குமாறு பல போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இச்சமயத் தில் தமிழகம் வந்த மோடிக்கு எதிர்ப்புக்;கள் எழுகின்றன.
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசுவாமி மோடியை வரவேற்கச் செல்ல மாட்டேன் என்று உறுதியாக கூறியபோதும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி அவரை வரவேற்கிறார். நியாயமான முதலமைச்சர் என்றால் பிரதமரை வர வேற்கச் சென்றிருக்காது விட்டிருந்தால் அவர் அதிர்ச்சியடைந்து சிந்தித்தி ருப்பார்.
இதேபோன்று தான் அன்று நடந்தது. இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் என்ற வகையில் எனது தலைமையில் அனைத்து தரப்பினரும் இணைந்து போராடிக்கொண்டிருக்கின்றோம்.
அச் சமயத்தில் முதலமைச்சராக இருந்த கருணாநிதி அனைத்துக்கட்சி கூட்டத்தினை கூட்டினார்.
உடனடியாக ஈழத்தில் நடைபெறும் போரினை நிறுத்தாது விட்டால் தமிழக அமைச்சர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று நானும்ரூபவ் த.பாண்டினும் வலியுறுத்தியபோது கலைஞர் அமைச்சர்கள் மட்டுமல்ல நாற் பது உறுப்பினர்களும் இராஜினாமச் செய்வோம் என்று கூறவோம் அது தீர்மா னமாக நிறைவேற்றப்பட்டது.
இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருதினங்களில் தமிழகத்திற்கு வருகை தந்திருந்த வெளிவிவகார அமைச்சர் பிரணாப்முகர்ஜி கலைஞரைச் சந்திக்கி ன்றார்.
இதனையடுத்து ஊடகவியாளர்களை சந்தித்த கலைஞர் இந்திய அர சாங்கம் போர் நிறுத்தத்தினை வலியுறுத்துகின்றது.
ஆகவே 40 உறுப்பினர்களும் இராஜினாமச் செய்யவேண்டியதில்லை என்று அறிவித்தார்.
அனைத்துக்கட்சி தீர்மானம் எடுத்திருந்த நிலையில் மீண்டும் அனர்த்துக் கட்சியைக் கூட்டாது கலைஞர் எவ்வாறு சுயமான அறிவிப்பினைச் செய்யமுடியும். ஆகவே அவர் இளைத்தது பெரும் துரோகம் என்பதை அன்றே கண்டனத்துடன் கூறினேன்.
அதன் பின்னர் நான் பிரனாப்பிற்கும், கலைஞருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் பின்னணி தொடர்பில் ஆராய்ந்தபோது “2 ஜி ஊழல்” தொடர்பான கோப்பினை கலைஞருக்கு காட்டி கலைஞயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டதாக தகவல் கிடைத்தது.
ஆகவே மாநில அரசாங்கத்தின் பலவீனம் டில்லிக்கு வாய்ப்பாகிவிட்டது.
பிழையான வழிநடத்தல் அத்துடன் இக்காலத்தில் சிங்கள இராணுவத்திற்கு ஆலோசகராக இந்தியாவின் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் சதீஸ் நம்பியார் செயற்பட்டார்.
அவருடைய சகோதரர் விஜய் கே நம்பினார் ஐக்கிய நாடுகள் பொதுச் செய லாளருக்கு இராணுவ ஆலோசகராக பணியாற்றினார்.
வெளிவிவகார செயலா ளராக கே.பி.எஸ் மேனனும் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக எம்.கே. நாராயணன் ஆகியோரும் பதவிகளை வகித்தனர்.
சோனியா காந்தியிடம் கணவரை கொலை செய்தவர்களை பழிவாங்க தக்க தருணம் ஏற்பட்டுள்ள நிலையில் அந்த இழந்து விடக்கூடாது என்று கூறி இவர்கள் அனைவரும் சோனியா காந்தியை பிழையாக வழி நடத்தினார்கள்.
தமிழர்களின் பூர்வீகப் பகுதிகளில் இராணுவம் நிலைகொண்டிருக்கின்றது. இதனால் அரசியல் பிரதி நிதிகளால் பாரியளவில் எதனையும் முன்னெடுக்க முடியாத நிலைமையொன்றுதான் அங்குள்ளது. ஜோசப் பரராஜசிங்கம் குமார் பொன்னம்பலம் போன்வர்களை படுகொலை செய்தபோது இந்தியா அது தொட ர்பில் கேள்வி எழுப்பியதா?
அதற்போது அரசியல் தலைமை தாங்கும் சம்பந்தன் இறுக்கமான நடவடிக்கை களை எடுத்தால் அவருக்கு ஏதாவது நிகழ்ந்தால் இந்தியா கேள்வி எழுப்புமா? ஆகவே அவர்களின் நெருக்கடியான நிலைமையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அதற்போது அரசியல் தலைமை தாங்கும் சம்பந்தன் இறுக்கமான நடவடிக்கை களை எடுத்தால் அவருக்கு ஏதாவது நிகழ்ந்தால் இந்தியா கேள்வி எழுப்புமா? ஆகவே அவர்களின் நெருக்கடியான நிலைமையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ் மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள். ராஜபக்ஷவின் கொடூரத்தையும் தனது கட்சியில் தமிழ் வேட்பாளர்களை நிறுத்தி தமிழ் பிரதேசங்களில் வெற்றி பெறச் செய்து அதனை சர்வதேசத்திற்கு பிரசாரம் செய்ய முனைந்த சூழ்ச் சியையும் நன்கு அறிந்து தான் அவரை தோற்கடித்ததோடு தமிழ் கூட்டமை ப்பினையும் வெற்றி பெறச் செய்தார்.
தற்போது கூட சம்பந்தன் தலைமையிலான குழுவினர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையல்லாப் பிரேரணையை ஆதரித்துள்ளார்கள். அது அரசியல் ரீதி யான தேக்க நிலைக்கு எடுக்கப்படும் முடிவுகளாகும். அதனால் மட்டும் எத னையும் சாதித்து விட முடியாது.
தற்போது கூட சம்பந்தன் தலைமையிலான குழுவினர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையல்லாப் பிரேரணையை ஆதரித்துள்ளார்கள். அது அரசியல் ரீதி யான தேக்க நிலைக்கு எடுக்கப்படும் முடிவுகளாகும். அதனால் மட்டும் எத னையும் சாதித்து விட முடியாது.
தெற்கு வாசலை தட்டும் சீனா ஈழத்தமிழர்களுக்கு, தமிழ்த்தலைவர்களுக்காக இந்தியா என்ன செய்தது என்பதை விட்டுவிடுவோம். தற்போது நிலைமை என்ன என்பதை கூட டெல்லி விளங்காது இருக்கின்றது. விடுதலைப்புலிகள் பலமாக இருக்கும் வரையில் இந்துமா சமுத்திரத்தில் பிரச்சினைகள் இருக்க வில்லை.
தற்போது என்ன நடக்கிறது. 1962 இல் நேரு பிரதமாரக இருந்தபோது வடக்கில் சீனாவினதும் மேற்கில் பாகிஸ்தானினதும் அபாயம் என்றும் இருக்கும். இலங்கை நமக்கு உட்பட்ட நாடு என்பதால் தென் இந்தியா பாதுகாப்பன பிரதேசம் என்பதை உணர்ந்து அங்கு இராணுவ முகாம்களை தளபாடங்களை அமைத்தார்.
தற்போது என்ன நடக்கிறது. 1962 இல் நேரு பிரதமாரக இருந்தபோது வடக்கில் சீனாவினதும் மேற்கில் பாகிஸ்தானினதும் அபாயம் என்றும் இருக்கும். இலங்கை நமக்கு உட்பட்ட நாடு என்பதால் தென் இந்தியா பாதுகாப்பன பிரதேசம் என்பதை உணர்ந்து அங்கு இராணுவ முகாம்களை தளபாடங்களை அமைத்தார்.
தற்போது இந்தியாவின் 700 இராணுவ தொழிற்சாலைகள் தென்னிந்தியாவில் உள்ளன. அவ்வாறு இந்தியாவின் பாதுகாப்பில் முக்கிய தளமாக இருக்கும் தெற்குவாசலை சீனா தட்ட ஆரம்பித்திருக்கின்றதல்லவா? நேருவின் தீர்க்க தரிசனமான சிந்தனை தற்போதுள்ளவர்கள் சிதைத்து விட்டார்கள். திபெத்திலி ருந்து இந்தியாவை ஆக்கிரமிக்க வேண்டியதில்லை.
அவசியம் ஏற்பட்டால் மன்னாரில் இருந்து கூட சீனா இந்தியாவை ஆக்கிர மிக்கலாம். வெறும் 20 மைல் தொலைவில் சீனா இருக்குமளவிற்கு அதன் ஆக்கிரமிப்பு வலுத்துள்ளது. தற்போது இந்தியாவுக்கு ஈழத்தமிழர்களைப் பற்றி கவலைப்படுவதை விடவும் தனது நாட்டின் இறைமையை பாதுகாப்பது பெருங்கஷ்டமாகியுள்ளது. இந்துமா சமுத்திரத்தின் கட்டுப்பாடு இந்தியாவை விட்டுச் சென்றுள்ளது.
டெல்லி தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கே என்ன வழியென்று தெரியாத நிலைமை ஏற்பட்டுள்ளதே. இதற்கு மோடி என்ன பதில் சொல்லப்போகின்றார். சர்வதேச சூழல் மாறவேண்டும் ஈழப் பிரச்சினை தொடர்பிலான நிலைப்பாடு களில் மாற்றம் தேவையேற்பட வேண்டும் என்றால் சர்வதேசத்தின் சூழல் மாறவேண்டும். இந்தியாவின் நிலைப்பாடு மாறாது இருக்கின்றபோதும் உலக நாடுகளின் மனநிலை மாற ஆரம்பித்துள்ளது.
இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்தமையால் தனது சர்வதேச போக்குவரத்துக்கு ஆபத்தாகும் என்று சர்வதேச நாடுகள் சிந்தித்தமையால் தான் சந்திரிகாவை மையப்படுத்தி ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்திரி பால சிறிசேனவை இணைத்து சீன ஆதரவாளராக இருந்த ராஜபக்ஷவை பத வியில் இருந்து அகற்றுவதற்கு சர்வதேசம் வழி சமைத்தது.
இவ்வாறு சர்வதேசத்தில் மாற்றங்கள் ஏற்படும் போது ஈழத்தமிழருக்கு ஆதர வாக தமிழக அரசியல் தலைமைகளும் உறுதியாக நிற்க வேண்டியுள்ளது.
2வருடங்களுக்கு முன்பே நிலைமை நன்கு தெரியும் விடுதலைப்புலிகளுக்கு தற்போது நான்காது ஈழப்போரில் நெருக்கடியான சூழல் ஏற்படும் என்பதை இரண்டு வருடங்களுக்கு முன்னரே அறிந்திருந்தார்கள். காரணம் புலிகளுக் காக சர்வதேசத்திலிருந்து வரும் ஆயுதக் கப்பல்கள் இந்திய கடற்படையின் துணையுடன் மூழ்கடிக்கப்பட்டுவிட்டன.
புலிகளிடமிருந்து 14 சர்வதேச கப்பல்களும் இழக்கப்பட்ட நிலையில் ஆயுத ரீதியான பிரச்சினைகள் அவர்களுக்கு காணப்பட்டது. அவ்வாறான நிலையில் விடுதலைப்புலிகள் இரண்டு வருடங்களுக்கு முன்னதாக அவர்களின் ஆயுத ரீதியான பரிவர்த்தனை துண்டிக்கப்பட்டதை அடுத்து என்ன செய்ய வேண் டுமே அச் செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்கள்.
👉. தலைவர் உள்ளார்
விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருக்கின்றார். அதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. சரி, அவர் உயிருடன் இல்லை. புலிகளை முழு மை யாக அழித்து விட்டோம் என்றால் சிங்கள இராணுவத்துக்கு ஒரு இலட்சம் பேரை எதற்காக தற்போது இணைக்கின்றார்கள்.
அவர்களுக்கு இந்தியாவில் எதற்கு பயிற்சி அளிக்கின்றார்கள். அதற்கான அவசியம் என்ன? வடக்கில் எதற்காக இலட்சக்கணக்கான இராணுவம் நிறு த்தப்பட்டுள்ளது. போராளிகள் இருந்தால் இராணுவம் இருக்க வேண்டும் என்ப தில் நியாயம் உள்ளது.
அப்பாவி மக்கள் இருக்கின்றபோது அங்கு எதற்காக இராணுவம் இருக்க வேண்டும்?
பொதுமக்களை பார்த்து அச்சப்பட வேண்டிய அவசியம் என்ன?
இதுவொருவிடயம்ரூபவ் பிரபாகரன் உயிரிழந்து விட்டதாக உடலொன்றை காண்பித்தார்கள். உண்மையில் அவருடைய உடலாக இருந்திருந்தால் ராஜ பக்ஷ அரசாங்கம் அதனை கொழும்பிற்கு கொண்டு வந்து சர்வதேச ஊடகங்க ளுக்கு காண்பித்திருப்பாரா இல்லையா?
அதனை ஏன் செய்யவில்லை. அதற்கு அடுத்ததாக மரபணுப் பரிசோதனை (டி.என்.ஏ) சோதனை செய்தாக கூறினார்கள். பிரபாகரன் இறந்த தருணத்தில் அவருடைய பெற்றோர்கள் வல்வெட்டித்துறையில் தான் இருந்தார்கள்.
ராஜீவ் உடலத்தினை அடையாளப்படுத்திய வைத்தியநிபுணர் சந்திரசேகர னிடத்தில் இவ் விடயம் சம்பந்தமாக கேட்ட போது ரூபவ் டி.என்.ஏ.சோதனை நடத்தும் வசதியே இலங்கையில் இல்லை என்றும் அவ்வாறான சோதனை கள் சென்னையில் தான் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியாக கூறுகின் றார். இதனை விட ராஜபக்ஷ காண்பித்த உடல் பிரபாகரனின் உடல் அல்ல என்பதற்கு வேறு என்ன ஆதராம் தேவையாகவுள்ளது.
பங்களாதேஷ் விவகரம் சம்பந்தமாக வாஜ்பாய் இந்திராகாந்தியின் வீட்டை முற்றுகையிட்டபோதும் அவர் அமைதியாகவே இருந்தார். இரண்டு வருடமாக அப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அப்போராட்டம் வெற்றி பெற்றதற்கு அந்நாட்டு மக்கள் அமைப்புக்கள்ரூபவ் இந்தியாவின் உதவி ஆகியன மட்டும் காரணமல்ல. சர்வதேசத்தில் மாற்றம் ஏற்றபட்டது. அக்காலத்தில் அமெரிக்க ஜனாதிபதி நிக்ஷன் சீனாவுக்கு விஜயம் செய்தார். இதனையடுத்து சோவியத் பிரதமர் இந்தியா வந்தார் ஒபந்தங்களைச் செய்தார்.
குறிப்பாக இந்தியாவை எந்தநாடு தாக்கினாலும் சோவியத்து துணையாக வரும் என்ற இராணுவ ஒப்பந்தம் முக்கியமானது. இதுவே இந்தியாவின் முத லாவது இராணுவ ஒப்பந்தமாகும். இதனையடுத்தே இந்திய படைகள் அங்கு சென்றன. நிக்ஸின் சீன விஜயம் வரலாற்றினையே மாற்றியது.
அது போன்று வியட்நாம் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அமெ ரிக்க தேர்தலில் ஜோர்ஜ் கெனடி வெற்றி பெற்றமையால் படைகளை வாபஸ் வாங்கினால் இதனால் அப்போராட்டம் நடைபெற்றது.
ஆகவே சர்வதேச சூழல்கள் விடுதலைப்போராட்டங்களில் மாற்றத்தினை ஏற் படுத்தியுள்ளது. ஆகவே சர்வதேச சூழல் மாற்றத்துக்கு அமைவாக பிரபாகர னின் பிரசன்னமும் இருக்கலாம்.
(நேர்காணல்:- ஆர்.ராம்)
- நன்றி - வீரகேசரி