தியாகி திலீபனின் சிலை மட்டக்களப்பில் நிறுவுவதற்கு ஆயத்தம்.!
மட்டக்களப்பு, கோறளைப்பற்று பிரதேச சபை எல்லைக்குள் உட்பட்ட வீதி சுற்று வட்டங்களில் தமிழர்கள் மரபை நிலை நிறுத்தும் வகையில் அன்னை பூபதி, தியாக திலீபன், ஜோசப்பரராசசிங்கம் ஆகியோர் சிலைகளை நிறுவுவ தற்கு முன் வருமாறு கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் கு.குணசேகரம் தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் முதலாவது அமர்வு, சபையின் கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய் கிழமை இடம்பெற்றது. இதன்போது கல ந்து கொண்டு உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது
வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் முதலாவது அமர்வு, சபையின் கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய் கிழமை இடம்பெற்றது. இதன்போது கல ந்து கொண்டு உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது
”எமது கோறளைப்பற்று பிரதேச சபை எல்லைக்குள் உட்பட்ட கிரான் சுற்று வட்டம், கும்புறுமூலை சுற்று வட்டம், வாழைச்சேனை பெற்றோல் நிலைய சுற்று வட்டம் ஆகிய மூன்று சுற்று வட்டங்களுக்கும் தமிழர்கள் அடையாளங் கள் அழிந்து வருவதால் அதனை தமிழர்கள் மரபை நிலை நிறுத்தும் வகை யில் அன்னை பூபதி, தியாக திலீபன், ஜோசப்பரராசசிங்கம் ஐயா ஆகியோரின் சிலைகளை தமிழர்களின் அடையாளமாக நிறுவ வேண்டும் என்று தவிசாளரி டம் கோரிக்கையை முன் வைக்கின்றேன்.
மேலும் எமது கிராமங்களில் மணல் ஒழுங்கைகள் அதிகமாக காணப்படுகின் றன. வீதி விளக்குகளும் எமது வட்டாரத்திற்கு தேவைப்படுகிறன.” எனத் தெரி வித்துள்ளாா்.