ஆறுமாத குழந்தையை வெட்டி கொலை செய்த தந்தை தற்கொலை.!
பிங்கிரிய இஹல பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தனது குடும்பத்திலுள்ள மூவரை வெட்டி காயப்படுத்தியதுடன் தனது ஆறு மாதக் குழந்தையையும் கொலை செய்துள்ளதாக பிங்கிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் தெரிய வருவதாவது,
குறித்த சந்தேக நபர் தனது மனைவி, ஆறு மாதக் குழந்தை மற்றும் மனை வியின் பெற்றோர் போன்றவர்க ளையே இவ்வாறு வெட்டிக் காயப்படு த்தியதுடன் தானும் தற்கொலை செய் துள்ளார்.
இவரால் வெட்டுக் காயத்துக்கு இலக்கான குழந்தை சிகிச்சைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள் ளது.
இதேவேளை காயமடைந்த மனைவி, மனைவியின் தந்தை, தாய் ஆகி யோர் ஆபத்தான நிலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரி விக்கப்பட்டுள்ளது.