Breaking News

யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டிற்காக ஊடகவியலாளர் பல மணி நேரம் காத்திருப்பு!

இனவாத மற்றும் தகாத வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி திட்டித் தீர்த்து பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபட முனைந்த ரயில்வே அதிகா ரிக்கு எதிராக முறைப்பாடு செய்ய பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற தமிழ் பெண் ஒருவர் மற்றும் தமிழ் ஊடகவியலாளர் ஆகியோர் பல மணி நேரங்க ளாக காத்திருக்க வேண்டிய கட்டாயத்திற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனா்.

யாழ்ப்பாணம் கொழும்பு பயணிகளில் புகையிரதத்திற்குள் வைத்து தமிழ் குடு ம்பப் பெண் ஒருவருக்கு பாலியல் துன் புறுத்தல்களை மேற்கொள்ள முயற்சி த்த புகையிரதத் திணைக்கள அதிகா ரியை, அங்கிருந்த தமிழ் ஊடகவியலா ளர் ஒருவர் தட்டிக் கேட்க முற்பட்ட போது அவரை இனவாத மற்றும் தகாத வார்த்தைப் பிரயோகங்களைப் பயன் படுத்தி அவரையும் அந்த அதிகாரி வார்த்தைகளால் துன்புறுத்தியுள்ளாா். 

கொழும்பிலிருந்து நேற்று முன்தினம் காலை யாழ்ப்பாணத்திற்கு புறப்பட்ட பயணிகள் ரயிலில் வவுனியாவில் வைத்து ஏறிய பிரித்தானிய பிரஜாவுரி மையைக் கொண்ட தமிழ் பெண் ஒருவர் மீது புகையிரத அனுமதிச் சீட்டு பரிசோதிக்கும் பரிசோதகர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்த முனைந்துள்ளார். 

சாவகச்சேரிக்கும் மீசாலைக்கும் இடையில் ரயில் பயணித்துக் கொண்டிருந்த போது நடைபெற்ற சம்பவத்தை நேரில் கண்ட  பத்திரிகை ஊடகவியலாளர் ஒருவா் பயணச் சீட்டு பரிசோதகரின் நடவடிக்கைக்கு எதிராக தலையிட்ட போது அவரையும் மிகவும் கீழ்த்தரமாக ஏசும் காட்சிகள் அடங்கிய காணொளி யொன்று சமூக வலைத்தளங்களில் மின்னலாகியுள்ளது. 

கொழும்பு மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த ஜயந்த பெரேரா என்ற பரிசோத கருக்கு எதிராக ஊடகவியலாளர் ஒருவரும் பாதிக்கப்பட்ட பெண்ணும் பொலிஸ் நிலையத்தில் நேற்றையதினம் முறைப்பாடும் செய்துள்ளனர்.

எனினும் இந்த முறைப்பாட்டை செய்வதற்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலை யத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவிற்குச் சென்ற தமக்கு பல மணி நேரங் கள் காத்திருக்க நேரிட்டதாக ஊடகவியலாளர் தெரிவித்துள்ளாா்.