தமிழ் தேசிய கூட்டமைப்பு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கு எப்படி தயாராகுவீா்கள்?
கடந்த இறுதிக்கட்ட யுத்தத்தில் 1-லட்சத்து 45-ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப் பட்ட, முள்ளிவாய்க்கால் இன அழிப்பின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 22 எம்.பிக்கள் கொழும்பிலும், இந்தியாவிலும், லண்டனிலும், கனடாவிலும் வாழ்ந்துள்ளனா்.
அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படு கிறார்களே என்று அதற்கெதிராக அவ ர்களில் ஒருவராவது உண்ணா விர தம் இருந்தனரா? இன்று எந்த முகத் தோடு முள்ளிவாய்க்கால் நினை வேந்தலை அனுஸ்ட்டிக்கத் தயாராகி றார்கள்? வெட்கமில்லையா?
என தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பின ரும், கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான ஞா.கிருஸ்ணபிள்ளை (வெள்ளி மலை) கேள்வி தொடுத்துள்ளாா்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும், கல்முனை மாநகரசபை பிரதி மேயருமான காத்தமுத்து கணேஸ் ஏற்பாட்டில் அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்ற தேர்தலுக்குப் பின்னரான தமிழர் விடுதலைக் கூட்டணியின் கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதான உரையாற் றுகையில் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பியுள்ளார்.
கிருஸ்ணபிள்ளை தொடர்ந்து உரையாற்றுகையில்:
1977 இலிருந்து 2004 வரை தமிழர் விடுதலைக் கூட்டணி கொடி கட்டிப்பறந்தது. உதயசூரியன் சின்னம் தமிழ்மக்கள் மனங்களில் இதயத் தாமரையாகயிருந் தது. தந்தை செல்வா வழிவந்த கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.
தமிழர்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டுமென்பதற்காக அன்றைய தமிழ்த் தலைவர்களான தந்தை செல்வா, ஜி.ஜி.பொன்னம்பலம், சௌ.தொண்டமான், கே.டபிள்யு.தேவநாயகம் போன்றேரெல்லாம் சேர்ந்து உருவாக்கிய கட்சி இது.
1977-இல் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் 18-எம்பிக்கள் தெரிவானார்கள். அண்ணன் அமிர்தலிங்கம் வரலாற்றில் தமிழ் எதிர்க்கட்சித்தலைவராகத் தெரிவானார்.
2004-இல் விடுதலைப் புலிகளின் ஆதரவோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பு எனும் பெயரில் 22- பேர் தெரிவாகியதைத் தொடர்ந்து தமிழினத்திற்கு சாபக் கேடு தலைதூக்கியது. இன்று த.தே.கூட்டமைப்பின்
ஒருங்கிணைப்புக் குழு வைக்கூட்டுவதற்கு அதிலுள்ள ஒரு தலைவர் மற்றத்தலைவருக்கு கடிதம் எழுதவேண்டிய துர்ப்பாக்கிய நிலை.
அதனை ஊடகங்களில் போடவேண்டிய நிலையில் அவர்கள். இதுதான் அவர் களது ஜனநயாகம்.
உள்ளத்திலே ஒன்று உதட்டிலே ஒன்று. அவர்கள் ஈழம், வடக்கு - கிழக்கு இணைப்பு, புதிய யாப்பு, சுயநிர்ணயம் என்ற வார்த்தை களைக்கூறி மக்களை ஏமாற்றிவந்தனர்.
85-வீதமான பாமர மக்களை ஏமாற்றி 15-வீதமான படித்த அல்லது பணக்கார வர்க்கம் ஆண்டுகொண்டிருக்கிறது. தேர்தல் காலத்தில் வேட்டியுடன்வந்து பொய் வாக்குறுதிகளை வழங்கி வாக்குகளைச் சுருட்டுவார்கள். பின்னர் மக் களை மறந்து செயற்படுவார்கள்.
ஜெனீவா சர்வதேசம் என்று மக்களை ஏமாற்றி வந்து இறுதியில் சர்வதேச பொறிமுறைக்குள் இலங்கையை தண்டிக்க முடியாதென சுமந்திரன் எம்.பி. புலம்புகின்றாா்.
இப் பித்தலாட்டத்தை இன்னும் மக்கள் நம்பவேண்டுமா? கொடி கட்டிப்பறந்த தமிழினம் குந்தியிருக்க ஒரு நாடு இல்லை. மாற்றினம் வாழவேண்டும் தமி ழன் தாழவேண்டும் மாற்றினமே வாழு வாழு தமிழினமே தாழு தாழு என்பது அவர்களது தாரக மந்திரமாகும்.
அவர்கள் ஆட்சியயைப்பிடிக்க யாருடனும் கூட்டுச்சேரலாம். அவர்களுக்குப் பெயர் தியாகிகள். தமிழர் விடுதலைக் கூட்டணி கல்முனையில் சேர்ந்தால் துரோகிகள். இது என்ன நியாயம்?
கூட்டிக்கொடுத்தவனுடனும் காட்டிக் கொடுத்தவனுடன் அவர்கள் சேர்ந்து ஆட்சியமைக்கலாம்.
அது பிரச்சினையில்லை. அவர்கள் தியாகிகள். நாம் சேர்ந்தால் துரோகிகள்.
அப்போது தமிழரசுக்கட்சிச் செயலாளரின் மண்டையைக் கொத்தியவனுடன் இன்று யாழ்ப்பாணத்தில் கூட்டுச் சேர்ந்து ஆட்சியமைக்கலாம். சிங்கள பெரும் பான்மையினம் துரோகிகள் என்றெல்லாம் மேடைகளில் தொண்டை கிழியக் கத்தி வெறுப்பேற்றிய ஸ்ரீ.ல.சு.கட்சியுடனும், ஜ.தே.கட்சியுடனும் ஆட்சியமை க்கலாம்.
ஏன் கிழக்கில் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளைக் கருவறுக்கும் ஸ்ரீ.ல.மு.கா.உடன் சேர்ந்து பொத்துவில், காரைதீவு, நாவிதன், வெளிப்பிரதேச ங்களில் சேர்ந்து ஆட்சியமைக்கலாம். அப்போதெல்லாம் அவர்கள் தியாகிகள்.
இங்கு காத்தமுத்து கணேஸ் சேர்ந்தால் துரோகி. இதே வேளை ஹென்றி சேர்ந்தால் அவர் தியாகி. யாருக்கு கதை அளக்கிறார்கள்?
அந்தக்காலம் மலையேறிபோய்விட்டது. மொத்தத்தில் தமிழினத்தை தாரை வார்த்த பங்கு இந்த த.தே.கூட்டமைப்பினருக்கே உண்டு. இவர்களிருக்கும் வரை தமிழினத்திற்கு விமோசனம் இல்லையென அவர் அங்கு மேலும் தெரி வித்துள்ளாா்.
எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலை முகங்கொள்வது தொடர்பாகவும் அங்கு பலரது கருத்துக்களும் பெறப்பட்டு தீர்மானம் எடுக்கப்பட்டது.
கூட்டத்தில் தமி ழர் விடுதலைக் கூட்டணியின் நிருவாகச் செயலாளர் கே.சங்கையா கல் முனை மாநகரசபை உறுப்பினர் திருமதி சுமித்ரா ஜெகதீசன், தமிழர் விடுத லைக் கூட்டணியின் தீவிரஆதவாளர் டாக்டர் கி.அருணன் உள்ளிட்ட ஆதரவா ளர்கள் கலந்துகொண்டு தமது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனா்.