Breaking News

சுமந்திரனுக்கு எதிராக ஓமல்பே சோபித்த தேரர் எச்சரிக்கை.!

வடக்கு, கிழக்கு பகுதிகளில் விகாரைகள் அமைப்பதை தடைசெய்யவேண்டும் என விடுத்துள்ள அறிவிப்பிற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தமது நிலைப்பாட்டை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. 

தென்னிலங்கையின் பிரதான சங்க தலைவர் கலாநிதி ஓமல்பே சோபித்த தேரர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். வடக்கு மற்றும் கிழக்கில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவது தடை செய்யப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளாா். 

அதனையடுத்து எம்.ஏ.சுமந்திரனின் இவ் அறிவிப்பு அரசியல் யாப்புக்கு மாற் றான ஒன்றாகவும் முறைகேடான ஒன்றாகவும் இருப்பதால் இதனூடாக மத பேதம் ஏற்படுவதற்கு வழி வகுப்பதாகவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இந்த அறிவிப்பை விடுத்த சுமந்திரனின் நாடாளுமன்றஉறுப்புரிமை பறிக்கப்பட வேண்டும் என்பதோடு, அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை சுமந்திரனுக்கு பௌத்த விகாரைகள் அமைப்பது மாத்திரமா பிர ச்சினைக்குரியது, வேறு சமயஸ்தலங்களை அமைப்பதுஅவருக்கு பிரச்சினை யில்லையா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

வடக்கு கிழக்குப் பகுதிகள் எங்கும் பௌத்த தளங்கள் சிதறிக்கிடக்கின்ற நிலை யில், யாருடைய அதிகாரத்தை பெற்றுக் கொண்டு சுமந்திரன் இது போன்ற அறிவிப்புக்களை விடுப்பது என்று கேட்க வேண்டியுள்ளதாக தெரிவித்த ஓமல்பே சோபித்ததேரர், இவரின் அறிவிப்பு உண்மையிலேயே கொடூரமான ஒன்றெனத் தெரிவித்துள்ளாா்.