Breaking News

பொருளாதார வீழ்ச்சிக்கு ஐக்கிய தேசியக் கட்சியே காரணம் - பந்துல

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சிக்கு ஐக்கிய தேசியக் கட்சியினரே பொறுப்புக்கூற வேண்டுமெனக் கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பி னர் பந்துல குணவர்தன சபையில் தெரிவித்துள்ளாா். 

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக் கிழமை நடைபெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை சபை ஒத்தி வைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரை யாற்றுகையில் மேற்கண்டவாறு உரையாற்றியுள்ளாா்.  

மேலும் உரையாற்றுகையில், 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தின் போது சிறப் பாக கடைப்பிடிக்கப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை நல்லாட்சி அரசாங்கமா னது சீரழித்து விட்டது. நாட்டின் வருமானம் தொடர்ந்து குறைந்து வருவதுடன் ரூபாவின் பெறுமதியும் வீழ்ச்சி கண்டுள்ளது. 

வட்டி வீதம் அதிகரித்துள்ளது, அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பெரு மளவில் உயர்வடைந்துள்ளது. இந்நிலையில் இன்று பெற்றோல், டீசல் என்ப வற்றின் விலைகளும் அதிகரித்துள்ளது. 

இதற்கு சர்வதேச நாணய நிதியமே காரணமாகும். சர்வதேச நாணய நிதி யத்தை நிபந்தனைகளின் பிரகாரமே பெற்றோல், டீசல் விலைகள் அதிகரித் துள்ளன. அடுத்த தவணை கடன் தொகை பெற்றுக்கொள்ளும் நோக்குடனே அரசாங்கம் பெற்றோல் டீசல்களின் விலைகளை அதிகரித்துள்ளது. 

ஆகவே நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி ஐக்கிய தேசியக் கட்சியே பொறுப்புக் கூற வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.