Breaking News

அரசியல் தீர்வை கவனத்திலெடுக்காது 20 ஆவது அரசியலமைப்பை தீர்மானிக்க முடியாது - த. தே.கூ

தேசிய இனப் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வை மையப்படுத்திய விடயங்களை கவனத்தில் கொண்டே உத்தேச 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து தீர்மானிக்கலாமெனத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் விவரித்துள்ளாா்.   

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை மையை நீக்கப்பட வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள் கையில் மாற்றம் இல்லையெனத் விவரித்துள்ளாா். 

தற்போது நிறைவேற்றதிகார ஜனாதி பதி முறைமையை நீக்குவது மாத்தி ரம் பிரச்சினை அல்ல. அரசியல் தீர்வு போன்வற்றையும் நாம் கருத்திற் கொள்ள வேண்டும். இவற்றுக்கு ஒன்றாக தீர்வினைப் பெற்றுக்கொள்ள கூடிய வகையிலான அரசியல் அமைப்பு தொடர்பாகவே நாம் செயற்பட்டு வருகின் றோம்.

1978 ஆம் ஆண்டு நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை கொண்டு வரப்பட்டது. எனினும் 1948 ஆம் ஆண்டு முதல் தேசிய இனப்பிரச்சினை காணப்படுகின்றது. இவை அனைத்தையும் தீர்க்கும் வகையிலான அரசியல் அமைப்பு உருவாக் கப்பட வேண்டும். 

இவ்வாறான சூழ்நிலையில் 20 ஆவது அரசியலமைப்பு தொடர்பில் எதிர்வரும் திங்கட் கிழமை பாராளுமன்ற குழு கூட்டத்தில் கலந்துரையாடிய பின்னரே தீர்மானமொன்றை மேற்கொள்ள முடியுமென விவரித்துள்ளாா்.