ஜெனீவாவில் பேச விரும்பவில்லை - அமைச்சர் மனோ கணேசன்.!!
ஸ்ரீலங்காவில் நிலவும் பிரச்சனைகளை ஜெனிவாவில் பேச விரும்பவில்லை யென அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
எம்மை விசாரிக்கும் அளவிற்கு வெளி நாட்டவர்கள் தூயவர்கள் அல்ல எனத் தெரிவித்ததுடன் இது தொடர்பான பொறிமுறை இலங்கை யிலேயே உருவாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
நாவலையில் உள்ள தேசிய ஒருங்கி ணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சில் சமய வழிபாடுகள் இன்று வியாழக் கிழமை இடம்பெற்றிருந்தன.
அதன்போது அமைச்சர் மனோ கணேசன் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சில் கடமைகளை ஆரம்பித்தன் பின்னர் உரையாற்றும் போதே இவ்வாறு விவரித்துள்ளாா் என்பது குறிப்பிடத் தக்க விடயமாகும்.