கிழக்கில் மீண்டும் சூரிய உதயம் நீதிபதி இளஞ்செழியனுக்கு திருமலையில் வரவேற்பு!
யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் பலத்த பாது காப்புக்கு மத்தியில் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் இன்று (30) உத்தி யோகபூர்வமாக கடமையயை பொறுப்பேற்றுள்ளாா்.
"கிழக்கில் மீண்டும் சூரியன் உதித்து விட்டது" என்ற கோஷத்துடன் திரு கோணமலை நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் வரவேற்பு நிகழ்வு இதன் போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆயுதம் தாங்கிய பொலிஸார், விஷேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடு படுத்தப்பட்டதுடன் திருகோண மலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம். ஹம்ஸா மற்றும் பதிவாளர்கள், சட்டத்தரணிகள், ஊழியர்கள் எனப் பலரும் சேர்ந்து மாலை அணிவித்து வரவேற்றுள்ளனா்.
தமது கடமையயைப் பொறுப்பேற்றதுடன் இரண்டு மணித்தியாலங்கள் சிநேக பூர்வமாக தமது நீதிமன்ற கட்டமைப்பு தொடர்பாகவும், நீதிமன்றங்களின்மேல் மக்கள் வைக்கும் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டியதன் அவசியம் பற்றி யும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளாா்.
இவரது பணி மென்மேலும் சிறக்க எமது இணையம் சாா்பில் நாமும் இவரை வாழ்த்துப்பாடி வரவேற்கின்றோம்.