சவால்களுக்கு முகங்கொடுக்கத் தயார் என - கயந்த
நாம் நாட்டை பொறுப்போற்றபோது நாடு இருளிலிருந்தது. இருளிலிருந்த நாட்டை நாம் தான் வெளிச்சத்துக்கு அழைத்து வந்தோம்.
ஆகவே எத்தகைய சவால்கள் வந் தாலும் அதற்கு முகங்கொடுப்பதுடன் ஜன நாயகத்தையும் சமாதானத்தை யும் நிலை நாட்டும் நடவடிக்கை களை முன்னெடுப்போம் என அமைச் சர் கயந்த கருணாதிலக்க தெரிவித் துள்ளாா்.
ஆகவே எத்தகைய சவால்கள் வந் தாலும் அதற்கு முகங்கொடுப்பதுடன் ஜன நாயகத்தையும் சமாதானத்தை யும் நிலை நாட்டும் நடவடிக்கை களை முன்னெடுப்போம் என அமைச் சர் கயந்த கருணாதிலக்க தெரிவித் துள்ளாா்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக் கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத் தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு உரைத்துள் ளாா்.
மேலும் உரையாற்றுகையில்,
சர்வதேச ரீதியில் இலங்கை மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் அந் நிலைலைய மாற்றிய மைத்தோம். அத்தோடு தகவல் அறியும் சட்ட மூலத்தை கொண்டு வந்து ஜன நாயகத்தை நிலை நாட்டினோம்.
தற்போது நாட்டில் வெள்ளை வேன் கலாசாரம் இல்லை. ஊடகவியலாளர் வெளிநாடு செல்லாமல் நிம்மதியாக உறங்க முடியும்.
கடந்த ஆட்சியாளர்களு க்கு யுத்தம் முடிவடைந்ததும் நாட்டை முன்னேற்ற வாய்ப்புக் கிடைத்தது.
எனினும் அந்த வாய்ப்பை முன்னைய ஆட்சியாளர்கள் தவற விட்டுவிட்டனர். ஆகவே நாமும் அந்த தவறை இழைக்காது ஜனநாயகம், சமாதானத்தை பாது காக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுப்போமெனத் தெரிவித்துள்ளாா்.