Breaking News

கிளிநொச்சி கண்டாவளை கோரக்கன்கட்டுப்பகுதியில் புதையல் தேடும் பணி ஆரம்பம்!

கிளிநொச்சி கண்டாவளை கோரக்கன்கட்டுப்பகுதியில் புதையல் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் இன்றையதினம் (10-05-2018) அகழ்வு பணி ஆரம் பிக்கப்பட்டுள்ளது. 

கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதி மன்ற கட்டளைக்கு அமைவாக இந்த அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டுள் ளது. கிளிநொச்சி கண்டாவளைப் பிர தேச செயலர் பிரிவிற்குட்பட்ட கோரக் கன்கட்டு கிராம அலுவலர் பிரிவிற் குட்பட்ட கிராம விஸ்தரிப்பு திட்டக் காணி ஒன்றில் புதையல் இருப்பதாக தெரிவித்து விசாரணை மேற்கொண்டு வரும் குற்றப்புலனாய்வு பிரிவு பொலிசார் இன்று குறித்த இடத்தை கிளிநொ ச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக அகழ்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இன்று பகல் 1.00 மணியளவில் குறித்த அகழ்வுப்பணி நீதிமன்ற பதிவாளர் மற்றும் கிராம சேவையாளர், நீதிமன்ற உத்தியோகத்தர்கள், தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் குறித்த முன்னெடுக்கப்பட்டு வரு கின்றது. 

அகழ்வுப்பணியில் ஈடுபட்ட பைக்கோ இயந்திரம் பழுதடைந்த நிலையில் குறி த்த பணி சில மணி நேரம் இடை நிறுத்தப்பட்டு மற்றொரு இயந்திரத்தின் உத வியுடன் அகழ்வுப்பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.