Breaking News

நிவாட் கப்ராலின் வங்கி கணக்குகளை பரிசீலிக்கும்படி நீதிமன்றம் அனுமதி.!!

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் வங்கி கணக்கு களை பரிசீலனை செய்வதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அனு மதி வழங்கியுள்ளது. 

மத்திய வங்கியின் முன்னாள் ஆளு நர் அஜித் நிவாட் கப்ராலின் வங்கி கணக்குகளை பரிசோதனை செய்ய பொலிஸ் நிதி மோசடி பிரிவு அனுமதி கோரியி ருந்தது. 

கடந்த 2014 ஆம் ஆண்டு இலங்கை யில் பொது நலவாய நாடுகளுக்கான விளையாட்டு போட்டிகளை நடத்துவ தற்காகவும் அந்த நாடுகளின் இணக்கத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவும் அரச பணத்தை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடா் பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலிடம் இதற்கு முன் விசாரணைகள் நடத்தப்பட்டன. 

இதன் போது, சீ.டபிள்யு ஹம்பாந்தோட்ட பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறு வனத்திற்கு கிடைத்த 690 மில்லியன் ரூபா பணத்தை செலவிடும் போது அதில் மோசடிகள் நடந்துள்ளதாக விசாரணைகளின் வாயிலாக கண்டறியப்பட்டுள் ளன. 

குறித்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்வதற்காக பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கு வழங்கப்பட்ட 25 மில்லியனுக்கு அதிக மான பணம் நிறுவனத்தின் கணக்கில் வைப்புச் செய்யப்படவில்லை என தெரி விக்கப்படுகிறது. 

எனினும் அந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் 245 ரூபா மாத்திரமே இருப் பதாகக் கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தில் அஜித் நிவாட் கப்ரல், மகிந்தானந்த அளுத்கமகே, நாமல் ராஜபக்ச ஆகியோர் இணை தலைவர்களாகவும் உதய செனவிரத்ன, அனில் நளின் ஆட்டிகல, நாலக கொடஹேவா, பியந்த குமார ரத் நாயக்க, ராணி ஜயமஹா ஆகியோர் பணிப்பாளராகவும் கடமையாற்றியிருந் தனர். 

கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையில் அஜித் நிவாட் கப் ரால் மத்திய வங்கியின் ஆளுனராக கடமையாற்றியிருந்த போது நடைபெற் றதாகக் கூறப்படும் அரச சொத்து துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பிலேயே தற்போது விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.