மைத்திரி, ரணிலிடம் நாட்டை நிர்வகிக்கும் தகுதியில்லை - தலைமை ஏற்பதாக மஹிந்த.!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரிடம் நாட்டை நிர்வகிக்கும் திறன் இல்லை. அதனால் தற்போது நாட்டில் பொருளாதார பயங்கரவாதம் தலை தூக்கியுள்ளது.
அப்பொருளாதார பயங்கர வாதத்திற்கு எதிரான போராட்டத்துக்கு தலைமை தாங்குவதற்கு நான் தயாராக உள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளாா்.
அப்பொருளாதார பயங்கர வாதத்திற்கு எதிரான போராட்டத்துக்கு தலைமை தாங்குவதற்கு நான் தயாராக உள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளாா்.
அத்துடன் ஒவ்வொரு மே தினக் கூட்டங்களிலும் எமக்கு பாரிய பலம் கிடைக்கிறது. ஆகவே இம்முறை மே தினம் மூலம் கிடைக்கும் பலத்தைக் கொண்டு நல்லாட்சி அரசாங்கத்தை மேலும் வலுவிழக்கச் செய்து வீட்டுக்கனுப்புவோம் எனத் தெரிவித்துள்ளாா்.
கூட்டு எதிர்க்கட்சியின் தொழிலாளர் தினக்கூட்டம் நேற்று காலி சமனல மைதானத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், கடந்த மே தினத்தில் காலிமுகத்திடலில் சனக்கூட்டம் நிறைந்து வழிந்தது.
நல்லாட்சி அரசாங்கத்தை முழுந்தாளிடச் செய்த மே தினமாக அது அமைந்தது. எனவே இன்றை மே தினக் கூட்டத்துடன் அரசாங்கத்தின் தவளும் நிலையை அடையும். கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி என மூன்று தரப்பையும் ஒன்றாக தோற்கடிக்க முடிந்தது.
அதுதான் மக்களின் தீர்ப்பாகும். மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் எஞ்சியுள்ளவர்களையாவது பாதுகாக்க வேண்டுமாயின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதற்குரிய அறிவித்லை விடுக்க வேண்டும்.
அல்லாது போனால் அவர்ளையும் பாதுகாக்க முடியாது போகும்.அரசாங்கத்திற்கு தீர்மானம் எடுப்பதற்குப் பயம். எனினும் எம்மை சிறைக்கு அனுப்புவதாயின் அச்சமின்றி தீர்மானம் எடுக்கின்றனர்.
வெசக் தினம், மே தினம் என்பவற்றை மாற்றுவதற்கும் அச்சம் கொள்வதில்லை.விஞ்ஞானத் தன்மையுடன் அமைச்சரவை அமைப்பதாகக்கூறிக்கொண்டு அமைச்சரவையை நியமித்தனர். அவர்களின் விஞ்ஞானத் தன்மையினை கண்டுகொள்ள முடிந்தது. லொத்தர் சபையை வெளி விவகார அமைச் சின் கீழ் கொண்டு வந்துள்ளனா்.
மத்திய வங்கியை பிரதமரின் கீழ் கொண்டு வந்தனர். அதனாலேயே மத்திய வங்கியில் மோசடி இடம்பெற்றது. ஜனாதிபதியின் அலுவலர்கள் இலஞ்சம் பெற்றதாக சிக்கியுள்ளனர். எனது செயலாளருக்கு எதிராகவும் குற்றசாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.
எனினும் அவரை அரசியல் ரீதியாகவே குற்றம் சாட்டியுள்ளனர். நல்லாட்சி அரசாங்கத்திடம் வழியமைக்கப்பட்ட பொருளாதா கொள்கைத் திட்ம் இல்லை. மத்தள விமான நிலையத்தில் நெல்லை களஞ்சியப்படுத்தினர். அந்தளவிற்கு எமது ஆட்சியில் நெல் உற்பத்தியில் தன்னிறைவுள்ளது.
ஆனால் தற்போதைய நிலையை குறிப்பிடத் தேவையில்லை. மேலும் தற்போது விவசாயிகளை மாத்திரமல்லாது அவர்கள் பிள்ளைகளையும் பழி வாங்குகின்றனர்.அம்பாந்தோட்டை துறைமுகத்தை நாம் அமைத்தோம். அத னைப் பார்க்கும்போது எமக்கு சந்தோஷம் ஏற்படுகிறது.
எனினும் அதனையும் விட அதனை விற்பனை செய்யும்போது பிரதமரின் முக த்தில் சந்தோஷம் தென்பட்டது. மேலும் மக்களுக்குச் சொந்தமான காணிகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்கின்றனர். ரூபாவின் பெறுமானம் நாளுக்கு நாள் குறைகிறது.
அதனால் பொருட்களின் விலை அதிகரிக்கிறது. அது குறித்து அரசாங்கம் அக்கறையற்றிருக்கிறது. ரூபாவின் விலையை இருநூறு ரூபா வரையில் அதிகரிக்குமாறு அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் ஆலோசனை வழங்கியுள்ளது. சகல துறைகளிலும் வரி விதிக்கப்படுகிறது.
பெட்டிக் கடையொன்றுக்கும் வரி விதிக்கப்படுகிறது. விகாரைகள் மீதும் வரி விதிக்கப்படுகிறது. தம்புள்ளை விகாரையின் உண்டியல்களுக்கும் சீல் வைக்கப்பட்டது.பத்து இலட்சம் தொழில்வாய்ப்புகளை வழங்குவதாக் குறிப்பிட்டனர். எங்கே அவை வழங்கப்பட்டதா?
குருநாகல் வொக்ஸ் வோகன் நிறுவனம் எங்கே. இவ்வாறாக இந்த அரசாங்கம் வாயளவில் மாத்திரம வீரம் பேசும் பொய் அரசாங்கமாக உள்ளது. ஆகவே இந்த அரசாங்கம் தொடர்ந்து சென்றால் மே தினத்தில் தொழிலாளர்கள் பேரணி செல்லப்போவதில்லை.
தொழிலற்றவர்களே பேரணி செல்ல வேண்டி வரும். மத்திய வங்கியில் கை வைத்தனர். ஆனால் தற்போது சமுர்த்தி வங்கிகளிலும் கைவைப்பதற்கு ஆய த்தமாகின்றனர். நாட்டில் எப்போதுமில்லாதவாறு பாதாள உலகக் குழுக்களின் செறயற்பாடுகள் அதிகரித்துள்ளன.
சட்டத்தை வலைத்து பாதாள உலகக் குழுக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. நாட்டில் பிரச்சினை நடைபெறும்போது பொலிஸ் ஊரடங்கு பிறப்பித்தே கட்டுப்படுத்துகின்றனர். எனவே நாட்டை நிர்வகிக்கும் திறன் இந்த இரு தலைவர்களிடமும் இல்லை.
மேலும் இலவசக் கல்வி, சுகாதாரம்,சமுர்தி என்பவற்றை இல்லாது செய்வது தொடர்பில் யோசிக்கின்றனர். அவற்றை எவ்வாறு இல்லாது செய்வது தொட ர்பில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிடம் திட்ட வரைபு கோரியுள்ளனர்.நாட்டில் பெளத்த விகாரை கட்டுவதாக இருந்தாலும் அனுமதி கோர வேண்டியுள்ளது.
எமக்கு மாத்திரம் இல்லை வேறு மதத்தவர்களுக்கும் இது பொருந்தும். ஆகவே ஏனைய சமயத்தவர்களும் இதில் கவனம் செலுத்த வேண்டும். அத் துடன் வடக்கில் விகாரை அமைப்பதற்கு இடமளிக்க முடுயாது எனக்குறிப்பி ட்டுள்ளனர். பிரதமரை ஜனாதிபதியே பாதுகாக்கின்றார்.
மேலும் பொய் வழக்குகளை தாக்கல் செய்து எதிராளிகளை தண்டிப்பதற்கும் எதிா்பார்க்கின்றனர். தற்போது நாட்டில் பொருளாதாரப் பயங்கரவாதம் தலை தூக்கியுள்ளது. ஆகவே அதற்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை தாங் குவதற்கு நாம் தயாராக உள்ளோம்.
எனவே அப் போராட்டத்தில் வெற்றிகொண்டு நாம் அமைக்கும் அரசாங்கத் தில் மக்கள் மீது விதிக்கப்பட்டுள்ள அனாவசிய வரிகளை நீக்குவோம் எனத் தெரிவித்துள்ளாா்.