நாட்டில் மீண்டும் யுத்தம் வெடிக்கும்!, ஆட்சியை கைப்பற்ற கோட்டாபயவின் சதி என பொன்சேகா
தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் மீண்டும்யுத்தமொன்றை முன்னெடுப்ப தற்கான ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது விசுவாசிகள் தெரிவித்து வரும் எச்சரிக்கைகளை நம்பி ஏமாற வேண்டாமென ஸ்ரீலங்கா வின் முன்னாள் இராணுவத் தளபதிபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கோரி க்கை விடுத்துள்ளார்.
குறுகிய அரசியல் இலாபங்களுக்காக இனங்களுக்கிடையில் மோதல்களை தூண்டிவிட்டு தற்போதைய மைத்ரி – ரணில் தலைமையிலான அரசாங் கத்தை நெருக்கடிக்கள் தள்ளும் நோக் கத்துடனேயே இவ்வாறான பிரசாரங் களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவரது இளைய சகோதரர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது விசுவாசிகள் மேற்கொண்டு வருவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளாா்.
ஸ்ரீலங்காவின் தற்போதைய மைத்ரி – ரணில் தலைமையிலான அரசாங்கத் தின் வன இலாகா மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக இருக்கும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்றைய தினம் களனி பிரதேசத்திற்கு விஜ யம் ஆகியுள்ளாா்.
இதன்போது மே 18 ஆம் திகதி வடகிழக்கில் தமிழர்கள் பெரும்எடுப்பில் அனுட் டித்திருந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள் நினைவேந்தல் நிகழ்வு கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் தெரிவித்துவரும் குற்றச் சாட்டுக் கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் வினாவியுள்ளனா்.
இக் கேள்விகளுக்கு பதிலளித்த பதிலளித்த ஸ்ரீலங்காவின் முன்னாள் இராணு வத் தளபதி சரத் பொன்சேகா, நாட்டின் பாதுகாப்பு தொடர்பிலோ அல்லது பயங் கரவாதம் தொடர்பிலோ புரிந்துகொள்ளும் அளவிற்கு ராஜபக்ச சகோதரர்களு க்கு புத்தி கூா்மையில்லையெனத் தெரிவித்துள்ளாா்.
மே 18 ஆம் திகதி போரின் போது கொல்லப்பட்ட பொது மக்களை நினைவு கூறும் வகையிலேயே பல நிகழ்வுகள் நடந்தேறியதாகவும் தெரிவித்த பொன்சேகா, அதனைவிடுத்து பயங்கரவாதிகளை நினைவுகூறும் வகையில் எந்தவொரு நிகழ்வுகளும் நடைபெறவில்லையெனத் தெரிவித்துள்ளார்.
போரில் உயிரிழந்த பொது மக்களை நினைவுகூறும்நிகழ்வாகவே அரசாங்கம் அந்த நிகழ்வுகளை பார்த்ததமாகவும் தெரிவித்துள்ள அவர், அதனை விடுத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடிகளை பறக்கவிட்டோ அதனை வைத்தோ விடுதலைப் புலிகள் நினைவு கூறப்படவில்லையெனத் தெரிவித்து ள்ளார்.
ஆனால் இச் சம்பவங்கள் நாட்டில் மீண்டும் யுத்தமொன்று வெடிக்கக் கூடிய ஆபத்தை உறுதிப்படுத்தியிருப்பதாக மஹிந்த ராஜபக்சவும் அவரதுசகோதரர் கோட்டாபய ராஜபக்சவும் எச்சரிக்கை விடுத்து வருவது வேடிக்கையாக இருப்பதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு நிலவரம் தொடர்பில்புரிந்துகொள்ளும் அளவிற்கு ராஜபக்ச விற்கோ அல்லது அவரது சகோதரரிற்கோ எந்தவொருஅறிவும் இல்லையெ னத் தெரிவித்துள்ள பீல்ட் மார்ஷல், பயங்கரவாதம் எவ்வாறு தலை தூக்கும், எதனால் பயங்கரவாதம் ஏற்படும் என்ற எந்தவொரு புரிதலும் ராஜபக்ச சகோ தரர்களுக்கு இல்லையெனத் தெரிவித்துள்ளார்.
ஆனால் அரசியல் சுயலாபங்களுக்காக இனவாதத்தை தூண்டி, அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளுவதற்காக நாட்டு மக்களை குழப்பும் வகையில் திட்ட மிட்டு இவ்வாறான பொய் பிரசாரங்களை ராஜபக்ச சகோதரர்கள் மேற் கொண்டு வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளாா்.
இவையே அவர்களது மிகவும் இழிவான நிகழ்ச்சி நிரல்கள்என்றும் தெரிவித்த சரத் பொன்சேகா, இதனையே அவர்கள் தொடர்ச்சியாககடைபிடித்தும் வருவ தாகவும் அது மாத்திரமன்றி ராஜபக்ச சகோதரர்களும், அவரது விசுவாசிகளும் கூறுவது போல், நாட்டில் மீண்டுமொரு யுத்தம் வெடிக்கும் அளவிற்கு எந்த வொரு சம்பவங்களும் நிகழவும் இல்லை, நிகழப்போவதும் இல்லையென ஸ்ரீலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
போர் வெற்றியின் ஒன்பதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மே மாதம் 19 ஆம் திகதி கொழும்பை அண்மித்த ஹோகந்தரை தக்சினாராமய விகாரையில், போரின்போது கொல்லப்பட்ட படையினரை கௌரவிக்கும் வகையில் நடை பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட் டாபய ராஜபக்ச, வடக்கில் நடைபெறும் சம்பவங்கள் மீண்டும் ஒரு பிரிவினை வாத யுத்தம் வெடிக்கும் ஆபத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ளாா்.

“வடக்கில் நேற்றும் இன்றும் நிலவும் சம்பவங்களை பார்க்கும் போது மிகவும் கவலையாக இருக்கின்றது. நல்லிணக்கம் என்பது இதுவல்ல. நல்லிணக்கம் என்ற போர்வையில் இனவாதத்தை பரப்ப இடமளிப்பதும், பயங்கரவாதிகளை நினைவு கூறுவதற்கு இடமளிப்பதும் நல்லிணக்கம் அல்ல.
நாம் அதிகாரத்தில் இருந்த போது யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் நல்லிணக்கத்தை உச்ச மட்டத்தில் நடைமுறைப்படுத்தினோம்.
வடமாகாண த்தை முழுமையாக அபிவிருத்தி செய்தோம். இடம்பெயர்ந்த அனைவரையும் மீளக்குடியேற்றினோம்.
இராணுவத்தினர் அங்கு புதைக்கப்பட்டிருந்த மிதி வெடிகளை அகற்றி ர். அதே போல் பல ஆண்டுகளாக இராணுவத்தினர் கைப்பற்றி வைத்திருந்த பொது மக்களின் காணிகள் மற்றும் வீடுகளை முடிந்த அளவிற்கு விடுவித்துள்ளனா்.
ஆனால் பல வருடங்களாக இனவாதத்தைஅங்குள்ள இளைஞர்களின் மனங்க ளில் பரப்பப்பட்டிருந்த காலப்பகுதியில் மீண்டும் அவ்வாறான கடும்போக்கு வாதம் மீண்டும் தலைதூக்காது இருக்கும் வகையில் பாதுகாப்பு வலையமைப் பொன்றை வட பகுதியில் நிர்மாணித்திருந்தோம்.
ஆனால் இன்று அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள நிலமை மிகவும் மோசமானதாக உள்ளது.
குறிப்பாக1977 ஆம் ஆண்டுகளில் 1980 ஆம் ஆண்டு ஆரம்ப காலப் பகு தியில் ஏற்பட்டிருந்த நிலமைகளுக்கு ஒப்பானதாக இருக்கின்றது.
அக் காலப்பகுதியில் இவ்வாறான நிலமைஎற்பட்டிருந்த போது அப்போதைய படைப் புலனாய்வுக் கட்டமைப்பு அப்போதைய அரசாங்கத்திற்கு வடக்கில் ஏற் பட்டிருந்த ஆபத்தான நிலமை குறித்து எச்சரித்திருந்தனர்.
ஆனால் அந்த எச்சரிக்கைகளை பொருட்படுத்தாது இருந்ததால் தான் நாம் 30 வருடகால கொடிய யுத்தமொன்றுக்கு முகம் கொடுத்திருந்தோம்.
ஆனால் உயிர் தியாகங்களை மேற்கொண்டு ஏற்படுத்திய சுதந்திரம் குறித்தும் கடந்த கால வரலாறு தொடர்பில் புரிதல் இன்மை காரணமாகவும் பல்வேறு சக்திக ளின் தேவைகளுக்காகவும், அரசியல் தேவைகளுக்காகவும் நாம் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தை காட்டிக் கொடுப்போமானால் மீண்டும் பாரிய அழிவை ஏற்படுத்திய யுத்தமொன்றுக்குள் எம்மை தள்ளிவிடக்கூடிய ஆபத்தாக உள் ளது.
அவ்வாறான நிலமை ஏற்பட்டால் குறிப்பாகஎமது படையினருக்கு எதிராக தற் போது இடம்பெறும் சம்பவங்கள் காரணமாக, எமது படையினர் தமது உயிர் களை தியாகம் செய்து நாட்டைப் பாதுகாக்க முன் வருவார்களா என நாம் கருத வில்லை.
அதனால் பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்றால் நாட்டின் பாதுகாப்பு தொடர் பில் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்" என்று கோட்டாபய தெரிவித் துள்ளார்.
இதேவேளை ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு விசுவாசமான சிங்கள பௌத்தபேரினவாத அமைப்புக்களுக்கு தலைமை தாங்கும் தலைமை பௌத்த பிக்குகளில் ஒருவரான தேசத்தை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் ஒருங் கிணைப்பாளர் எல்லே குனவங்ச தேரரும், வடக்கு கிழக்கில் மீண்டும் பிரி வினைக்கான செயற்பாடுகள் தீவிரமடைந்திருப்பதாக தெரிவித்திருந்தார்.
ஆனால் இச் செயற்பாடுகளை அரசாங்கத்தில் உள்ள சிலர் நியாயப்படுத்தி வரு வதாகவும் குற்றம்சாட்டிய குணவங்ச தேரர், எனினும் வடக்கு கிழக்கில் இடம் பெறும் சம்பவங்கள் மிகவும் ஆபத்தானவை என எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இச் சம்பவங்கள் தொடர அனுமதித்தால் நாட்டின் ஒருமைப்பாடும், இறையா ண்மையும் கேள்விக்குறியாகி விடுமென தேசத்தை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எல்லே குனவங்ச தேரர் மே மாதம் 21 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.