சந்திரிக்காவின் கோரிக்கையை நிராகரித்தாா் ஜனாதிபதி.!
நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடு விக்குமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க விடுத்த கோரிக்கை யினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்ததாக தகவல் வட்டா ரங்கள் புலம்புகின்றன.
ஊடகம் ஒன்று தெரிவித்த செய்தி யில் இவ் விடயம் விவரிக்கப்பட்டுள் ளது. அச் செய்தியில் மேலும் பாா்க் கையில்.....,
சந்திரிக்கா குமாரதுங்க ஜனாதிபதி யாக பதவி வகித்த காலப்பகுதியில் அவர் மீது தாக்குதல் நடத்த திட்ட மிட்ட மற்றும் உதவிய குற்றத்திற்காக தமிழ் அரசியல் கைதிகளுக்கு சிறை த்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தன்னை கொலை செய்ய முயற்சித்த குற்றத்திற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை வெசாக் தினத்தை முன்னிட்டு பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யுமாறு சந்திரிகா, ஜனாதி பதிக்கு கடிதம் அனுப்பியுள்ளாா்.
இவ் விடயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் சந்திரிக்கா குமாரதுங்க தெரியப்படுத்தியிருந்தார். மேலும், இக் கோரிக்கைக்கு அமைய இது வரையி லும், அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவில்லை.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரது ங்கவின் கோரிக்கையினை நிராகரித்துள்ளதன் காரணமாகவே அரசியல் கைதி களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவில்லையென தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.