காக்கை குருவி எங்கள் தமிழ்ச்சாதி என்றவரை கொன்றொழிப்பதில் என்ன நீதி.!
காக்கை குருவியும் எங்கள் தமிழ்சாதி என்று முரசறிவித்த முதுபெரும் கவி ஞன் இன்று உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் நெஞ்சு வெடித்தே வெடித் திருப்பான்.
ஆம், அப்படியான அரச பயங்கரவா தம் தூத்துக்குடியில் ஏதுமற்ற பொது மக்கள் மீது செலுத்தப்பட்டுக் கொண் டிருக்கிறது. வேறு யாராலும் இக் கொடுமை மேற் கொள்ளப்பட வில்லை.
மக்களை காத்திட வேண்டிய அவர் தம் உரிமைகளை நிலைநாட்டிட வேண்டிய அரசே தான் இத்தகைய பாரிய கொடுமைகளை அரங்கேற்றி வரு கிறது.
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றான் வள்ளலார்.
வாடி கிடந்த முல்லை கோடிக்கு தேரைத்தந்தான் நம் தமிழ் மன்னன் பாரி. தவ றான தீர்பளித்தமைக்காக அரசவையில் உயிர் விட்டான் பாண்டியன் நெடுஞ் செழியன் ஆம். நேர்மை சார்ந்து, மானுடம் சார்ந்து, உயிர் நேயம் சார்ந்து மன் னர்கள் பலர் ஆண்டு வந்த இந்த மண்ணில்தான் மக்களாட்சி எனும் பெயரில் மக்களை கொன்றொழித்துக்கொண்டிருக்கிறது.
மோடியின் ஏவல் அரசு.
பொதுச் சொத்தினை சேதப்படுத்தியதால் துப்பாக்கி சூடாம். பயங்கரவாதிகள் பேரணியில் புகுந்து விட்டதால் துப்பாக்கிசூடாம் யாரை ஏமாற்ற, யாரை குளிரவைக்க இக் கோர சம்பவத்தினை நிகழ்த்திக் காட்டியிருக்கிறீர்கள் எடப்பாடி.
ஆனால், ஒன்றை நினைவில் வைத்துக் கொள் ளுங்கள்.
கொடுங்கோலன் பாடிஸ்டா துவங்கி ஹிட்லர், முசோலினி வரை இறுதிக் காலத்தில் என்னவானார்கள் என்பதையும், பதவிக்காக பிறரை அண்டிப் பிழை த்தவர்கள் வரலாற்றில் எப்படி பதிவு செய்யப்பட்டுள்ளார்கள் என்பதையும்.