முதல்வர் அறையை முற்றுகையிட்ட ஸ்டாலின்.!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூடக்கோரி நீண்ட நாட்களாக போராடி வந்த அப்பகுதி மக்கள் நேற்றைக்கு முன் தினம் பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டுமென மனு அளிக்க இருந்த நிலையில், மக்கள் கலவரத்தில் ஈடுப்பட்டதாக கூறி சுமார் 13 பேரை சுட்டுக்கொன்றது காவல்துறை.
அதிகளவிலானோர் பலத்த காய மடைந்துள்ளனர்.
தூத்துக்குடியில் பொது மக்கள் மீது அடிப்படை விதி களைக்கூட பின்பற்றாமல் காவல் துறை துப்பாக்கிச்சூடு நடத்திய சம் பவம் குறித்து முதல்வரை நேரில் சந் தித்து விளக்கம் கேட்கவும், அம்மா வட்ட மக்கள் மீது தொடுக்கப்பட்டு ள்ள அறிவிக்கப்படாத அரச பயங்கர வாதத்தினை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டுமெனத் தெரிவிப்பதற் காகவும் இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்திக்க முயன்றார் தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்.
ஆனால், முதல்வரை சந்திக்க ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ க்கள் முதல்வர் அறையை முற்றுகை யிட்டுள்ளதால் தலைமை செயலகத்தில் பரபரப்பு நிலவியுள்ளது.