விமர்சிப்போரால் கவலையில்லை. முன்னோக்கி நகருவோம் - சீமான் உரை.!
நாம் தமிழர் கட்சியின் மீதும், என் மீதும் வைக்கப்படுகிற விமர்சனங்களை பற்றி கவலைப்படாமல் முன்னோக்கி நகருவோம் என தன் கட்சியினரிடத்தில் தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கை யில் தமது தார்மீக உரிமையான தனி நாடு கேட்டு அற வழியிலும், ஆயுத வழியிலும் நெடுங்காலமாக களமா டிய ஈழத்தமிழர்கள் மீது வல்லாதிக்க நாடுகளின் துணையுடன் இறுதிப் போரை நிகழ்த்தியது.
சிங்கள பேரினவாத அரசு. அப்பட்டமான போர்குற்றத்தில் ஈடுபட்ட சிங்கள அரசு குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட அதிகளவிலான தமிழர்களை கொன் றொழித்தது.
இலங்கையில் முள்ளிவாய்க்கால் என்னும் இடத்தில் நடைபெற்ற இறுதிக் கட்ட போரினால் கொன்றொழிக்கப்பட்ட தமிழர்களை நினைவுகூறும் வித மாக நேற்று சென்னையில் நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடைபெற்றது.
நிகழ்வில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "நம்மை நோக்கி வைக்கப்படும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை கடந்தது நட ந்தவற்றை குறித்து கவலைப்படாமல் முன்னோக்கி நகருவதில் கவனம் செலுத்துவோம்.
தமிழர் வாழ்வாதாரங்களை அரசுகளே சுரண்ட முயலுவது கடுமையான கண் டிக்கத்தக்கது. இளையோர்களின் துணையுடன் எம் இனத்திற்கெதிரான செயல் கள் எல்லாவற்றையும் முறியடிப்போம்" என உரையாற்றியுள்ளாா்.