தெருவில் வீசப்பட்ட வயோதிபரை இனங்காண உதவுமாறு வேண்டுகை!
அம்பாறை காரைதீவில் பட்டப்பகலில் முச்சக்கர வண்டியில் கொண்டுவந்து வீசப்பட்ட வயோதிபர் யார்? என்பது இன்னும் இனங்காணப்படாத நிலையில் தொடர்ந்து அவர் வைத்தியசாலையில் தஞ்சமடைந்துள்ளாா்.
இன்றைய தினம் (10-05-2018) வியாழக்கிழமை காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கி.ஜெயசிறில் வைத்தியசாலைக்குச்சென்று அவரது உடல் நிலை யில் முன்னேற்றம் பற்றியும் யாராவது தேடி வந்தனரா என்பது தொடர்பாக வும் வைத்தியரிடம் வினாவினார்.
எனினும் குறித்த முதியவா் இன்னும் சுயநினைவின்றி பிதற்றிய நிலையி லிருப்பதால் அவரை மேலதிக சிகிச் சைக்காக உயர் வைத்தியசாலைக்கு அனுப்ப வேண்டிய அவசியம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
வயோதிபர் தூக்கி வீசப்பட்ட சம்பவம் நேற்று (09-05-2018) புதன்கிழமை 1.40 மணியளவில் காரைதீவில் இடம்பெற்ற நிலையில் அவர் வாயைத்திறந்து கதைப்பதாயில்லை எனவும் ஆனால் ஒரேயொரு வார்த்தையை மட்டும் உதிர் க்கிறார் என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறிப்பாக சாப்பாடு' 'சாப்பாடு என்று மட்டும் வருகிறது. வேறொரு வார்த்தை யும் கதைப்பதாயில்லை என்றும் குறித்த முதியவரை இனங்காண உதவுமாறு கேட்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்டவர்கள் காரைதீவு வைத்தியசாலைக்கு வந்து இனங்காட்டமுடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.