நிறைவேற்று அதிகார முறைமை அவசியமில்லை என ஐ.தே.க..!
யுத்தம் நிறைவடைந்துள்ளமையினால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை அவசியமில்லை என்பJ ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடாகும்.
எனினும் தற்போதைய சூழலை பார் த்தே தீர்மானிப்போம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நெடு ஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிரு த்தி அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரி வித்தார்.
ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் அரசியலைமைப்பின் 20 வது திருத்தச் சட்டத்தை மக்கள் விடு தலை முன்னணி கொண்டு வருவதனால் அதனை ஆதரிக்க வேண்டிய அவ சியம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இல்லை.
இதேவேளை, ஜனாதிபதி முறைமை தொடர்ந்து இருப்பதனால் நாட்டுக்கு நன்மை ஏற்படும் எனில் குறித்த முறைமையின் அதிகாரத்தில் செய்ய வேண் டிய திருத்தங்கள் என்ன என்பது குறித்து ஆராய்ந்து நாம் உரிய தீர்மானம் எடுப்போம்.
மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டு வரப்படவுள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பான தனி நபர் பிரேரணை தொடர்பில் ஐக் கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து வினவிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளாா்.