ஊடகவியலாளர்களை மறுத்தது ஏன்?
வவுனியா கூமாங்குளம் நூலக வீதியிலுள்ள சின்னம்மன் கோவிலுக்கு முன் பாக சுற்றுமதில் அமைக்கப்பட்ட காணி ஒன்றில் பெருமளவு வெடி பொருட்கள் காணப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவல் அடிப்படை யில் நேற்று மாலை மாலை வவுனியா நீதிமன்றத்தின் அனுமதியுடன் அப்பகு தியில் அகழ்வுப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
இவ்வாறு அகழ்வுப் பணிகளை மேற் கொள்வதற்கு பொலிஸார், கடற்படை யினர், கிராம சேவையாளர், எனப்பல ரும் அங்கு சமூகமளித்துள்ள நிலை யில் அகழ்வுப்பணி நடைபெறும் பகு திக்கு ஊடகவியலாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் அனுமதிக்கப்பட வில்லை.
கடந்த காலங்களில் வவுனியாவில் பல பகுதிகளில் இவ்வாறு வெடி பொருட் களை தேடும் பணிகள் படையின ரால் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அங்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப் பட்டிருந்தனர் ஆனால் நேற்று இடம்பெற்ற அகழ்வுப்பணிகள் மிகவும் இரகசிய மான முறையில் மேற்கொள்வதானது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.