Breaking News

விக்கியின் செயற்­பாட்­டினால் தென்­னி­லங்­கையில் குழப்பமென குற்றச்சாட்டு - விஜ­ய­தா­ஸ ­ரா­ஜ­பக்ஷ

வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தலை­மையில் இடம்­பெற்ற முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்வு தென்­னி­லங்கை மக்கள் மத்­தியில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இந் நட­வ­டிக்கை படை­யினர் மத்­தி­யி லும் சிங்­கள மக்கள் மத்­தி­யிலும் தவா ­றான எண்­ணப்­பா­டு­க­ளையும் விதைத் ­தி­ருக்­கின்­றது என்று உயர் கல்வி மற் றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சர் விஜே­ய­தாஸ ராஜ­பக்ஷ குற்றம் சுமத் தியுள்ளாா். 

இரா­ணுவம் அகற்­றப்­ப­ட­வேண்டும் என்­பதே விக்­கி­னேஸ்­வ­ரனின் பிரச்­னை­யாக உள்­ளது. முத­ல­மைச்சர் ஆழ­மாக சிந்­திக்­க­வேண்டும் இல்­லா­விடின் மீண் டும் ஒரு இருண்ட யுகத்­திற்கு நாம் பயணம் செய்­ய­வேண்­டிய நிலை ஏற்­படு மென எச்சரிக்கை விடுத்துள்ளாா்.  

வவு­னி­யாவில் பாரம்­ப­ரிய உற்­பத்தி பொருட்கள் விற்­பனை நிலை­யத்­தினை திறந்து வைத்து உரை­யாற்­றி­ய­போதே அவர் இவ்­வாறு சுட்­டிக்­காட்­டினார். நேற்று முன்­தினம் நடை­பெற்ற இந்த நிகழ்வில் மேலும் கருத்து தெரி­விக்­கை யில் கூறி­ய­தா­வது, 

எங்­க­ளு­டைய நாட்டில் பொரு­ளா­தா­ரத்தை மேம்­ப­டுத்தி செல்ல முடி­யாமல் பல மாவட்­டங்கள் இருக்­கின்­றன. எங்கள் நாடு சுதந்­திரம் அடைந்த போது எமக் ­கென்று ஒரு இலக்கு உள்ளது. 

அந்த இலக்­கா­னது பொரு­ளா­தார ஏற்­றத்­தாழ்வு அற்ற சமூ­கத்தில் எல்­லோரும் மதிக்­கப்­பட வேண்டும் என்ற இலக்­க­கவே அது­வாக இருந்­தது. ஆனால் எமது அர­சியல் தலை­வர்­க­ளுக்கு இந்த இலக்கை அடைந்து கொள்ள முடி­யாமல் போனது. 

இதன் கார­ண­மாக வடக்­கிலும் தெற்­கிலும் பல சிக்­கல்கள் ஏற்­பட்­டன. இதனால் தென்­ப­கு­தியில் பெரும் பகுதி பொரு­ளா­தார வளத்தை சுவீ­க­ரித்து சுப போக­மாக வாழ்ந்த ஒரு­ப­கு­தி­யி­ன­ருக்கும் ஏனை­ய­வர்­க­ளிற்கும் இடையில் கிளர்ச்சி ஏற்­பட்­டி­ருந்­தது. 

எமது அர­சியல் வர­லாற்றை மீட்டு பார்க்­கின்ற போது 1971 ஆம் ஆண்டு கிளர்ச்சி, அதன்பின் 88மற்றும் 89 இல் ஏற்­பட்ட ஜே.வி.பி.யின் கிளர்ச்சி என்­ப­வற்­றிற்கு நாம் முகம் கொடுத்­தி­ருந்தோம். இது போலவே வட புலத்­திலும் பொரு­ளா­தார ஏற்­றத்­தாழ்வே இருந்­தது. 

இதன் கார­ண­மாக சுக­போகம் அனு­ப­வித்­த­வர்­க­ளிற்கும் ஏழை மக்­க­ளிற்கும் இடையில் பிளவு ஏற்­பட்­டது. இதனால் பல சிக்­கல்கள் ஏற்­பட்­டது என்­பதை மீண்டும் ஞாப­கப்­ப­டுத்த வேண்­டிய தேவை­யில்லை. 

 கடந்த காலங்­களில் பிர­பா­கரன் தலை­மையில் பல கிளர்ச்­சிகள் இடம்­பெற்­றன. அந்த கிளர்ச்­சி­களை தென்­னி­லங்­கையில் இருந்­த­வர்­க­ளுக்கு எதி­ரான கிளர்ச்­சி­யாக நான் கூற விரும்­ப­வில்லை. 

அது வட­பு­லத்­திலே இருந்த பொரு­ளா­தார ஏற்­றத்­தாழ்வின் கார­ண­மாக பொரு­ளா­தா­ரத்தை பெரு­வா­ரி­யாக சுவீ­க­ரித்து கொண்ட ஒரு தரப்­பி­ன­ருக்கும் அல்­லது அர­சியல் தலை­மை­யி­ன­ருக்கும் சாதா­ரண மக்­க­ளிற்கும் இடையில் ஏற்­பட்ட இடை­வெளி அல்­லது பார­பட்­சத்தை நீக்­கு­வ­தற்­காக நடைபெற்­ற­தா­கவே நான் கரு­துகிறேன். 

இந்த ஏற்­றத்­தாழ்­வு­களை நீக்­கு­வ­தற்­காக வட­பு­லத்தில் பல கிளர்ச்­சிகள் ஏற்­பட்­டன. அவை அவ்­வப்­போது பெரு­வா­ரி­யாக எழாமல் நீக்­கப்­பட்­டி­ருந்­தன. அந்த கிளர்ச்­சிகள் ஒரு இன­வ­தாக கிளர்ச்­சி­யாக தோற்றம் பெற காரணம் அப்­போது இருந்த அர­சியல் தலைமையேயாகும். 

அப்­போது தலைமை வகித்த அமிர்­த­லிங்­கத்தின் கருத்­துக்­களை ஒட்­டியே அவை ஒரு இன ரீதி­யான பிரச்­ச­னை­யாக பரு­ண­மிக்க கார­ணமாய் இருந்­தது. இந்த விட­யங்கள் தொடர்­பாக பார்க்­கின்ற போது அப்­போது இருந்த அர­சியல் தலை­வர்கள் தங்­க­ளது சமூ­கத்­திற்கு பொறுப்பு கூறு­வ­தோடு,

தங்­க­ளது சமூ­கத்தின் சுபீட்­சத்­திற்கு வழி­ச­மைப்­பதை விடுத்து பயங்­க­ர­வாத தலை­வ­ரான பிர­பா­க­ர­னிடம் இதன் தலை­யெ­ழுத்தை மாற்­று­வ­தற்­கான பொறு ப்பை வழங்­கி­யி­ருந்­ததன் ஊடாக கடந்த 30 வருட கால­மாக நாங்கள் பெரு­வா­ரி­யான இழப்­புக்­களை சந்­திக்க நேர்ந்­தது. 

அமிர்­த­லிங்­கத்தின் ஆசீர்­வா­தத்­தோடு துப்­பாக்­கியை கையில் எடுத்த பிரா­ப­கரன் பேரா­பத்து மிக்க தலை­மைத்­து­வத்தின் ஊடாக வடக்கு கிழக்கில் இருந்த பல அர­சி­யல்­வா­தி­க­ளி­னு­டைய உயிர்கள் காவு கொள்­ளப்­பட்­டி­ருந்­தது. இதன் கார­ண­மாக கடந்த 30 வருட காலத்­திற்கு மேலாக பல அழி­வு­களை நாம் சந்­தித்­தி­ருந்தோம். 

அறு­ப­தா­யி­ரத்­திற்கு மேற்­பட்ட உயிர்கள் காவு கொள்­ளப்­பட்­டி­ருந்­தன. தமிழ், முஸ்லீம், சிங்­கள மக்கள் தாம் அடைய வேண்­டிய இலக்­கு­களை தவற விட்­டி­ருந்­தார்கள். நாட்டில் சமா­தானம் நில­வு­கின்ற காலப்­ப­கு­தியில் தாய், தந்தை இறந்தால் பிள்­ளைகள் அவர்­க­ளது உடல்­களை மயா­னத்­திற்கு எடுத்­துச்­சென்­றி­ருந்­தார்கள். 

ஆனால் யுத்தம் நடை­பெற்ற காலப்­ப­கு­தியில் தாய், தந்­தையர் தங்­க­ளது பிள்­ளை­க­ளி­னதும் குழந்­தை­க­ளி­னதும் உடல்­களை மயா­னங்­க­ளிற்கு எடுத்து செல்­கின்ற துர்ப்­பாக்­கிய நிலை­யேற்­பட்­டது. 

இவ்­வா­றான நிலை­மையின் தாக்கம் தற்­போதும் காணப்­பட்டு கொண்­டி­ருக்­கின்­ற­மையால் இந் நிலை­மையை நாம் 24 மணி நேரத்­திற்குள் மாற்­றி­ய­மைக்க முடி­யாது. 

யுத்தம் முடி­விற்கு கொண்டு வரப்­பட்டு 09 வருடம் கடந்­தி­ருக்­கின்ற நிலையில் எங்கள் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் பல்­வே­று­பட்ட பொறுப்­புக்கள் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. அரச நிர்­வா­கி­க­ளா­கவோ அரச பிர­மு­கர்­க­ளா­கவோ இரா­ணுவ தரப்­பி­ன­ரா­கவோ பாது­காப்பு தரப்­பி­ன­ரா­கவோ இருக்­கலாம். 

அனை­வ­ரி­டமும் கொடுக்­கப்­பட்ட பொறுப்பு சமா­தானம், சக­வாழ்வு, சுபீட்சம் என்­பதை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தாகும். சமூக மற்றும் பொரு­ளா­தார ஏற்­றத்­தாழ்­வு­களை ஏற்­ப­டுத்­திய யுத்­த­மாக இருந்தால் அதில் இருந்து விமோ­சனம் பெற வேன்­டு­மாயின் எங்­க­ளு­டைய சமூக ஒற்­றுமை மேம்­ப­டுத்­தப்­பட வேண்டும். 

மற்றும் பொரு­ளா­தார சமப்­பா­டுகள் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும். நாங்கள் சமா­தா­னத்­தையும் சக வாழ்­வையும் ஏற்­ப­டுத்­து­கின்ற நிலை­மையில் ஊட­கங்கள் அர­சியல் பிள­வு­களை ஏற்­ப­டுத்­து­கின்ற கருத்­துக்­களை தாங்கி வரு­கின்­றன. கொழும்பில் மாத்­திரம் அதி­கா­ரங்கள் இருக்க கூடாது என்­ப­தற்­கா­கவே நாங்கள் மாகா­ண­ச­பை­களை உரு­வாக்­கி­யி­ருந்தோம். 

ஆனால் இன்று மாகாண சபையில் இருக்­கின்­ற­வர்கள் இந்த இலக்­கு­களை அடையும் நோக்­கோடு இருக்­கின்­றார்­களா என்­பது கேள்­விக்­கு­றி­யான விடயம். கடந்த யுத்­தத்­தினால் பல இன்­னல்­களை சந்­தித்த மாகா­ண­மாக இந்த வட­மா­காணம் உள்­ளது. 

ஆனால் இந்த மக்­களின் வாழ்­வா­த­ராத்தை உயர்த்­து­வ­தற்கும் அபி­வி­ருத்­தியை மேற்­கொள்­வ­தற்கும் இவர்கள் என்ன செய்­தார்கள் என்­பதை தெளி­வாக காண முடி­யா­துள்­ளது. தமது பத­வி­களை தக்­க­வைப்­ப­தற்­காக மற்­ற­வர்­க­ளை­குறை கூறிக்­கொண்டு அதற்­கான வழி­வ­கை­களை செய்து கொண்­டி­ருக்­கி­றார்­களே தவிர இந்த மக்­களின் சுபீட்­சத்­திற்­கா­கவும் சமூக மேம்­பாட்­டிற்­கா­கவும் இவர்கள் என்ன செய்­கி­றார்கள் என்ற கேள்வி எழு­கின்­றது. 

இன்று வட­பு­லத்தில் உள்ள இளைஞர், யுவ­தி­க­ளி­னு­டைய வாழ்வு பாரிய கேள்­விக்­கு­றி­யாக மாறி­யுள்­ள­தோடு போதை­பொருள் மற்றும் சிக­ரெட்­டிற்கு ஆட்­கொள்­ளப்­பட்­ட­வர்­க­ளாக காணு­கின்றோம். 

வட­மா­காண முத­ல­மைச்சர் தலை­மையில் ஒரு நிகழ்வு இடம்­பெற்­றி­ருந்­தது. அதை தமிழ் மக்கள் தினம் என்று செய்­தி­ருந்­தார்கள். இதனால் தென்­னி­லங்­கையில் உள்ள மக்கள் விச­னத்­துக்கு ஆளா­கி­யுள்­ள­தோடு குழப்ப நிலையை அடைந்­தி­ருக்­கி­றார்கள். 

இந்த நட­வ­டிக்கை இரா­ணுத்­தி­ன­ருக்கோ பாது­காப்பு படை­யி­ன­ருக்கோ சிங்­கள மக்­க­ளுக்கோ பல தவ­றான எண்­ணப்­பா­டு­களை விதைக்­கின்ற செய­லா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது என்­ப­தனை நாம் காண்­கின்றோம். 

இறுதி யுத்­தத்தின் போது முள்­ளி­வாய்க்­காலில் மூன்று இலட்­சத்­திற்கு மேற்­பட்ட உயிர்­களை பலிக்­க­டாக்­க­ளாக வைத்­துக்­கொண்டு பிர­பா­கரன் யுத்­தத்தை நடாத்­தி­யி­ருந்தார். 

ஒரு ­கா­லத்தில் வட­பு­லத்தில் வாழ்ந்த சிங்­கள, முஸ்லீம் மக்கள் 24 மணித்­தி­யா­லத்­திற்குள் வெளி­யேற்­றப்­பட்­டார்கள். இன்­றைய நிலையில் இப்­பி­ர­தே­சத்­திலே வாழ்ந்து வரும் தமிழ்,சிங்­கள, முஸ்லீம் மக்கள் ஒற்­று­மை­யாக வாழ்­கின்­றார்கள் என்றால் அதற்கு முப்­ப­டை­யி­னரே காரணம் என்­பதை யாவரும் அறிவர். 

இரா­ணுவம் அகற்­றப்­ப­ட­வேண்டும் என்­பதே விக்­கி­னேஸ்­வ­ரனின் பிரச்­னை­யாக உள்­ளது. இரா­ணு­வத்தை பொறுத்­த­மட்டில் அந்த பிர­தேச மக்­க­ளோடு நல்­லு­ணர்வை பேணு­வ­துடன் அவர்­க­ளுக்­கான பாது­காப்­பையும் வழங்கி வரு­கி­றார்கள். 

இறுதிப் போரில் கூட 3 இலட்சம் மக்­களை முப்­ப­டை­யினர் பாது­காப்­பாக மீட்­டி­ருந்­தனர் அத­னாலே இன்று சமா­தானம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஆனால் அந்த கால­கட்­டத்தில் தென்­ப­கு­தியில் இருந்த விக்­கி­னேஸ்­வரன் அங்­கி­ருந்­த­வர்­க­ளுடன் நல்லுறவை பேணிக்கொண்டிருந்தார். 

யுத்த பிரதேசத்தில் காலடி எடுத்து கூட வைக்கவில்லை. அப்பாவி மக்களுக் காக ஒரு வசனம் கூட பேசவில்லை.எனவே முதலமைச்சர் அவர்கள் ஆழமாக சிந்திக்கவேண்டும் அல்லாது விடில் மீண்டும் ஒரு இருண்ட யுகத்திற்கு நாம் பயணம் செய்யவேண்டிய நிலை ஏற்படும். 

அத்துடன் பிரபாகரன் பிறந்த தினத்தை இங்கு கொண்டாடினால் சிங்கள மக்கள் அவரின் மரண தினத்தை தென்பகுதியில் கொண்டாடும் நிலையும் உள்ளது. 

பிரபாகரனின் பிறந்தநாளை கொண்டாடினால் தென்பகுதியில். விஜயவீரவின் பிறந்தநாளையும் இறந்தநாளையும் அந்த மக்களும் அனுஸ்டிக்கவேண்டும் அல்லவா. அவ்வாறு இருக்கும் போது நல்லிணக்கத்தை எவ்வாறு கட்டமைப் பது. 

வடக்கிற்கு மாகாணசபை மூலம் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அதன் மூலம் அபிவிருத்திகளை மேற்கொள்ளலாம். ஆனால் எதையுமே செய் யாத நிலைமை எதிர்காலத்தில் அந்த மக்கள் இன்னும் பல பிரச்சினைகளிற்கு முகம்கொடுக்கும் நிலமையையே ஏற்படுத்துமெனத் தெரிவித்துள்ளாா்.