''கோட்டாபய ராஜபக்ச கொடூரமான கொலையாளி'' என மங்கள சமரவீர.!
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஒரு படுகொலை யாளி மாத்திரமன்றி நாட்டின் சொத்துக்களை கொள்ளையிட்ட மிகப் பெரிய திருடன் என ஸ்ரீலங்காவின் தற்போதைய மைத்ரி – ரணில் தலைமையிலான அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான மங்கள சமரவீர குற்றம் சுமத்தியுள்ளாா்.
கொழும்பிலுள்ள நிதி அமைச்சில் நேற்றைய தினம் மாலை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, கோட்டாபய ராஜபக் சவினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் படுகொலைகள் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பான பட்டியலொன்றை வெளியிட்டதுடன், தான் மாத்திரமன்றி நாட்டில் வாழும் பெரும்பாலனவர்கள் அவருக்கு பயந்தே இருப் பதாகவும் தெரிவித்துள்ளார்.
வியத்மக என்ற சிங்கள பேரினவாத கொள்கையுடன் கூடியஆட்சியொன்றை அமைப்பதை இலக்காகக் கொண்டு செயற்படும் அவர் தலைமையிலான அமைப்பினால் பதுளையில் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்சவின் இளைய சகோதரரான கோட்டாபயராஜபக்ச, அமைச்சர் மங்கள சமர வீர தனக்கு மிகவும் பயந்தவர் எனத் தெரிவித்துள்ளாா்.
கோட்டாபயவின் இந்த கூற்றுக்கள் தொடர்பில் நிதிஅமைச்சர் மங்கள சமரவீர விடம் கேட்டபோதே இவர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்மிகவும் கொடூர மானவர் என்றும் ஊழல் மோசடிக்காரர் என பகிரங்கமாக குற்றம் சுமத்தி யுள்ளாா்.
ஸ்ரீலங்காவின் மைத்ரி - ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள் சமரவீர கோட்டாபய ராஜபக்ச குறி த்து விபரித்த பட்டியல்....
“ உண்மையாகவே. கோடடாபய கூறுவது பொய் என்று இதற்கு முன்னர் கூறியிருந்தேன்.
ஆனால் நான் அவரைக் கண்டு அஞ்சுவதாக அவர் கூறியிருந்தது மாத்திரம் உண்மை. உண்மையிலேயே நான் கோட்டாபய ராஜபக்சவிற்கு சொல்ல முடி யாத அளவிற்கு பயந்தவன்.நான் மாத்திரமல்ல இந்த நாட்டில் வாழும் பலரும் அவருக்குப் பயம்.
ஆனால் நான் அவரைக் கண்டு அஞ்சுவதாக அவர் கூறியிருந்தது மாத்திரம் உண்மை. உண்மையிலேயே நான் கோட்டாபய ராஜபக்சவிற்கு சொல்ல முடி யாத அளவிற்கு பயந்தவன்.நான் மாத்திரமல்ல இந்த நாட்டில் வாழும் பலரும் அவருக்குப் பயம்.
அதேவேளை அவரால் என்ன முடியும் என்பதை நான் நன்கறிவேன். உதார ணத்திற்காக நான் இந்த குற்றச்சாட்டுக்களை எழுத்தமானதாக முன்வைக்க வில்லை. இந்த ஆவணத்தில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் தலையீட்டுடன் நடைபெற்றுள்ள குற்றங்கள் தொடர்பான பட்டி யல் இந்த ஆவணத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.
கருணா என்ற விநாயகமூர்த்தி முரளி தரனுக்கு முறைகேடாக ராஜதந்திர கட வுச் சீட்டொன்றை தாயரித்துக்கொடுக்க உதவி வழங்கியமை, நான் சோடித்து கூறும் குற்றச்சாட்டுக்கள் அல்ல இவை.
அதேபால் இராணுவ புலனாய்வாளர்க ளால் தெஹிவளை பொலிஸ் வலையத் திற்குள் 2008 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி தநேசன் பத்திரிகையின் ஆசிரியர் கீத் நொயார் கடத்திச் செல் லப்பட்டு தடுத்து வைத்து சித்திரவதை செய்த சம்பவத்துடனும் கோட்டாபய விற்கு தொடர்பிருப்பதாக கல்கிசை நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் இராணுவபுலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி யான மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர உட்பட எட்டு படைப் புலனாய்வா ளர்கள் கைதுசெய்யப்பட்டு அவர்களில் அமல் கருணாசேகர தவிர்ந்த ஏனை யோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கூறுவது என்றால் அமல்கருணாசேகவிற்கோ அல் லது ஏனைய படைப் புலனாய்வு அதிகாரிகளுக்கோ கித் நொயாருடன் முரண் பாடு இருக்கவில்லை. இவர்கள் உயர்மட்டத்தில் இருந்து வந்த உத்தரவையே நடைமுறைப்படுத்தியிருக்கின்றனர்.
அதேவேளை கல்கிசை பொலிஸ் வலையத்திற்குள் 2009 ஆம்ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்தவிக்கிரமதுங்க இராணுவ புலனாய்வாளர்களால் கூரிய ஆயுதங்களால் குத்தி படுகொலை செய்த சம்பவம் குறித்தும் விசாரணைகள் நடைபெறுகின்றன.
இவ்வாறான சம்பவங்களை பார்க்கும்போது அச்சம் வராதா? இந்த அனைத்து சம்பவங்களுடனும் கோட்டாபயராஜபக்சவிற்கு தொடர்பிருக்கின்றது என்பது இவை தொடர்பான வழக்குகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
இவை மாத்திரமன்றி ஊடகவியலாளர் உபாலி தென்னகோன் தாக்கப்பட்ட சம்பவம், பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங் களையும் படைப்புலனாய்வாளர்களைக் கொண்டு கோட்டாபய நடத்தி முடித் திருப்பதாக வழக்குகள்இருக்கின்றன.
வெலிக்கடை சிறைச்சாலை படுகொலைகளுடனும் நேரடி தொடர்பிருக்கும் கோட்டாபயவிற்கு நாம் அனைவரும் அஞ்ச வேண்டியது அவசியமே. கோட் டாபய ராஜபக்சபடுகொலையாளி மாத்திரமன்றி மிகப் பெரிய கள்ளன். அவன்ட்காட் மிதக்கம் ஆயுதக்களஞ்சியம், மிக் போர் விமான கொடுக்கல் வாங்கல் மாத்திரமன்றிபல சம்பவங்களில் கோடிக்கணக்கான அரச நிதியை கொள்ளையடித்த மிகப் பெரிய கள்ளன் தான் கோட்டாபய" என்று மங்கள சமரவீர தெரிவித்துள்ளாா்.
கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் அமைச்சர் மங்கள சமரவீரஇவ்வாறு குற்றச் சாட்டுக்களை அடுக்கியிருக்கின்ற நிலையில், மங்களசமரவீர கூறுவது போல் மிகவும் ஆபத்தானதும், ஊழல் மோசடி மிக்கதுமான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் இணைந்து கொள்வதற்கு கடந்த ஜனாதிபதித் தேர் தலுக்கு முன்னர் அமைச்சர் மங்கள சமரவீர இரகசிய சந்திப்புக்களை நடத்தி யிருந்ததாக கோட்டாபய ராஜபக்ச பதுளை கூட்டத்தில் குற்றம் சுமத்தியுள் ளாா்.
㈡ . கோட்டாபய ராஜபக்ச தொடர்ந்தும் உரையாற்றுகையில்....
“மங்கள சமரவீர அமைச்சர் 2014 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான அழை ப்பு விடுப்பதற்கு இரு வாரங்களுக்கு முன் னதாக அவரது நெருங்கிய சகாவான ருவான் பெர்டினேன்டஸ் என்னைத் தொட ர்புகொண்டு என்னைச் சந்திக்க வேண்டு மென தெரிவித்தாா்.
அவர் மற்றுமொரு நபருடன் இணைந்து என்னை சந்திக்க வந்தார்.
அப்போது ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியுடன் முர ண்பட்டுக் கொண்டிருக்கும் அனைவரையும் இணைத்துக்கொள்ள செயலாள ரான நான் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் என்னிடத்தில் கேட்டுக் கொண்டார்.
அதேவேளை மங்கள சமரவீரஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட விருப் பத்துடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.அதனால் நீங்கள்தான் அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று கேட்பதற்காகவே இங்கு வந்தேன் என்றும் கூறினார்.
அப்போது நான் செயலாளர் ஒருவர் அதனால் நீங்கள் ஜனாதிபதிமஹிந்தவை சந்தித்து இந்த ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள் என்று கூறினேன்.
இந்த அரசாங்கத்தின் நம்பிக்கைக்குரியவராக நீங்கள் மாத்திரமே இருப்பதாக அமைச்சர் மங்களகூறியதாகவும் அதனால் நீங்களே இதனை செய்ய வேண் டும்
என்று கேட்டுக்கொண்டதாகவும் றுவான் பெர்டினேன்டஸ் கூறினார். ஆனால் நானோமஹிந்த ஜனாதிபதியுடனேயே எதனையும் செய்துகொள்ளுங்கள் என்று கூறி அனுப்பி விட்டேன்.பின்னர் ஜனாதிபதி மஹிந்தவிற்கு உணவு வழங்கி பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
இதன்போது வெளிவிவகார அமைச்சுப் பதவியும், சட்டம் ஒழுங்கு அமைச் சையும் பெற்றுக்கொடுத்தால் மஹிந்த ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படு வதாக கூறியிருக்கின்றார்.
அதற்கு பின்னர் இந்த விடயம் தொடர்பில் பெசில் ராஜபக்சவுடனும் கலந் துரையாடியிருக்கின்றனர். மஹிந்த ஜனாதிபதி மங்களவின் இந்த கோரிக்கை களுக்கு இணங்காததை அடுத்தே அவர் மீண்டும் அந்தத் தேர்தலில் எமக்கு எதிராக பிரசாரம்செய்திருந்தார்" என்று கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.
எனினும் கொழும்பிலுள்ள நிதி அமைச்சில் நேற்றைய தினம்நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் மங்கள சமரவீர கோட்டாபயவின் இந்தத் தகவல்களை முற்றாக நிராகரித்துள்ளார்.
2014 ஆம் ஆண்டு இறுதிக்காலப்பகுதியில் முன்னாள்ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்சவும் அவரது சகோதரரான கோட்டாபய ராஜபக்சவுமே தன்னை சந்திக்க முயன்றிருந்ததாக தெரிவித்த அமைச்சர் மங்கள, கோட்டாபய ராஜபக்சவின் கோரிக்கையைதான் நிராகரித்துவிட்டதாகவும் கூறினார்.
㈡. நிதி அமைச்சர் மங்கள சமரவீர மேலும் உரையாற்றுகையில்...
“கோட்டாபய ராஜபக்ச ஏனைய கூற் றுக்களைப் போல் இதுவும்முற்றிலும் பொய்யானது. 2014 ஆம் ஆண்டு ஜனா திபதித் தேர்தலொன்றுக்கு தயாராகிக் கொண்டிருந்த போது செப்டெம்பர் – ஒக்டோபர் மாதமொன்றில் அமைச் சுப் பதவியொன்றுதொடர்பில் அல்ல ராஜபக்சவினர் என்னை சந்திக்க வேண்டு மெனக் கேட்டிருந்தனர்.
உண்மையில் கோட்டாபய ராஜபக்சவும் என்னை சந்திக்க வேண்டும் என்று தகவல்அனுப்பியிருந்தார். ஆனால் நான் கோட்டாபய ராஜபக்சவை சந்திப் பதை நிராகரித்துவிட்டேன்.அதேவேளை அவர் அவர் விரும்பும் இடங்களுக்கு நான் வரமுடியாது மஹிந்த ராஜபக்ச விரும்பினால் எனது வீட்டிற்கு வருமாறு கூறியிருந்தேன்.
அதற்கமைய அவர் என்னைசந்திக்க எனது வீட்டிற்கு வந்திருந்தார். அவர் என்னை சந்திக்க வந்திருந்தாரு ஒழியநான் அவர்கள் யாரையும் சந்திக்க எங்கும் போகவில்லை" என மேலும் தெரிவித்துள்ளாா்.