5 மாதங்களை கடந்த நிலையில் கூடுகின்றது வழிநடத்தல் குழு!
புதிய அரசியலமைப்பு உருவாக்கல் பணிகளுக்காக நியமிக்கப்பட்ட வழி நடத் தல் குழு 5 மாதங்களை கடந்த நிலையில் இன்று கூடுகின்றது.
வழிநடத்தல் குழுவின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலை மையில் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதி யில் இக் கலந்துரையாடல் ஆரம்ப மாகவுள்ளது.
புதிய அரசியலமைப்பு உருவாக்கச் சபையினால் இடைக்கால அறிக்கை மற்றும் 6 குழு அறிக்கைகளும் நாடா ளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி புதிய அரசியலமைப்பு தொட ர்பாக இறுதியறிக்கை உருவாக் கம் மற்றும் உத்தேச அரசியல் யாப்பு தொட ர்பாக இன்றைய கூட்டத்தின்போது கவனம் செலுத்தப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பத்தி விக்கிரமட்ண தெரிவித்துள்ளாா்.
புதிய அரசியலமைப்பு தொடர்பான வழிநடத்தல் குழுவின் கூட்டம் கடந்த வரு டம் இடம்பெற்றிருந்த நிலையில் பல்வேறு அரசியல் நெருக்கடிகளினால் இக் கலந்துரையாடல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்பு உருவாக்கல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள வழி நடத்தல் குழு இவ் வருடத்தில் கூடுகின்ற முதலாவது சந்தர்ப்பம் ஆகும்.