Breaking News

உறவுகளின் கண்ணீருடன் நிறைவானது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் !

முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் அமைதியான முறையில் நிறைவு பெற்றது. 

முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப் பட்ட உறவுகளை நினைவு கூறும் வகையில் தீபமேந்திய ஊர்தி பவனி வல்வெட்டித்துறையில் ஆரம்ப மாகிய வடமாகாணம் முழுவதும் ஊர் வலமாக சென்ற நிலையில் இன்று காலை 11.00 மணியளவில் முள்ளிவாய்க்கால் முற்றத்தை வந் ததையடுத்து, மணியோசை எழுப்பப்பட்டு, சீ.வி பொதுச் சுடரினை வடமாகாண முதலமைச் சர் சி.வி. விக்னேஸ்வரன், யுத்தத்தின்போது முள்ளி வாய்க்காலில் தனது தாய், தந்தை இருவரையும் இழந்த யுவதி கேசவன் விஜிதாவிடம் கையளிக்க அவர் பொதுச்சுடரேற்ற ஏனையவர்களும் சம நேரத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனா். 


தொடர்ந்து முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் உரையாற்றினார்.  தமிழ் மக்களின் இதயங்களில் ரணங்கள் மாறாத கனதியுடன் யுத்தத்தில் இறந் தவர்களுக்காக முள்ளிவாய்க்கால் மண்ணில் பொதுமக்கள் கண்ணீர் சொரிந்து மலர்கள் தூபி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தியதுடன் இன்று மதியம் 12.30 மணியளவில் நிகழ்வுகள் நிறைபெற்றுள்ளது. 


இந்த நிலையில் வலிகள் நிறைந்த முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை பொதுமக்கள், மக்கள் பிரதிதிகள் மற்றும் மதகுருமார் என ஆயிரக் கணக்கா னோர் அணி திரண்டு உணர்வு எழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.