அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளிற்காக யாழ் மாநகர உறுப்பினா்!
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் யாழ் கிளைத்தலைவரும், யாழ் மாநகர சபை உறுப்பினருமாகிய கே.எம்.நிலாம் அரசியல் கைதியான ஆனந்த சுதாகர னின் வீட்டிற்கு நேற்றைய தினம் (11-05-2018) விஜயம் செய்துள்ளாா்.
அத்துடன் அக்குடும்பத்திற்கு தனது ஆறுதலை கூறியதுடன், அப்பிள்ளை களை தனது வாகனத்தில் ஏற்றி கிளி நொச்சி நகர்ப்புற கடைகளுக்கு அழை த்துச் சென்று அங்கு பிள்ளைகள் தாம் விரும்பி கைகாட்டியவற்றை வாங் கிக் கொடுத்துள்ளாா்.
அத்துடன் மேலதிமாக வீட்டில் கல்வி கற்பதற்கான தளபாடங்கள், மகள் சங்கீதா ஆசைப்பட்டுக்கேட்ட பாடசாலைக்குச் செல்லவதற்கான துவிச்சக்கர வண்டி மற்றும் பாதணிகள், வீட்டில் அணிவதற்கான ஆடைகள் என்பன வற்றை வாங்கி கொடுத்துள்ளாா்.
மேலும் ஆனந்தசுதாகரனின் விடுதலைக்காக தனது குரல் தொடர்ந்து ஓங்கி ஒலிக்கும் என்றும் தெரிவித்துள்ளாா். இந்த நிலை வேறு எந்த பிள்ளைகளு க்கும் ஏற்படக்கூடாதென்றும் தனது ஆதங்கத்தை தெரிவித்ததுடன், ஆனந்த சுதாகரனின் விடுதலைக்காக இறைவனைப் பிரார்திப்பதாகவும் மேலும் தெரிவித்துள்ளாா்.