Breaking News

சா்வதேச நாடுகளின் அழுத்தமே காணிகளை விடுவிக்க காரணம் - முதலமைச்சர்.!

சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாகவே வடக்கில் படையினரின் கட்டுப் பாட்டில் இருந்த காணிகள் விடுவிக்கப்பட்டதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

சிங்கள ஊடகம் ஒன்றை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அச் செய்தியில் தொடர்ந்தும் தெரிய வருகையில்....

“காணிகளை விடுவிக்க தமிழ் மக்க ளுக்காக யாரும் எதனையும் செய்ய வில்லை. சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாகவே வடக்கில் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. 

இதனிடையே, வடக்கில் இராணுவத்தினர் நிலை கொண்டிருப்பதற்கு எவ்வித காரணங்களும் இல்லை” என முதலமைச்சர் தெரிவித்துள்ளதாக அச் செய்தி யில் விவரிக்கப்பட்டுள்ளது.