துமிந்தசில்வாவின் தீர்ப்பில் பல குறைபாடுகள் : நிரூபித்த சட்டத்தரணிகள்.!
சகல குற்றங்களில் இருந்தும் துமிந்த சில்வாவை நிரபராதியாக்கி விடுதலை செய்யுமாறும் சட்டத்தரணிகள் உயர் நீதிமன்றில் கோரிக்கை முன்னாள் நாடா ளுமன்ற உறுப்பினர் துமிந்தசில்வாவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, சட்டபூர்வமானது அல்ல என்று, ஜனாதிபதி சட்டத்தரணி நேற்று (08-05-2018) உயர் நீதிமன்றத்தில் நிரூபித்துள்ளார்.
மேலும் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீட்டு மனு விசாரணை க்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இத் தீர்ப்பு, துமிந்தசில்வாவை குற்ற வாளியாக மாற்றும் நோக்கத்தில் வழ ங்கப்பட்டுள்ளது என்றும், அதில் பல குறைபாடுகள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை நிரபராதியாக்கி விடு தலை செய்யுமாறு தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீட்டு மனு, முதல் தடவையாக கடந்த மார்ச் மாதம் 27ம் திகதி பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான ஐந்து பேர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாமி னால் விசாரணைக்கு உள்வாங்கப்பட்டுள்ளது.
இதில் விளக்கமளித்த ஜனாதிபதி சட்டத்தரணி அணில் சில்வா, வழக்கு விசார ணையின் போது முன்வைக்கப்பட்ட சாட்சி, சந்தேகம் இன்றி நிரூபிக்கப்பட் டதா என்பதை ஆராயாமல், அரச சட்டத்தரணியின் வாதத்தை மாத்திரம் கரு த்திற்கொண்டு நீதிபதி அந்த தீர்ப்பை எழுதியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள் ளாா்.
துமிந்தசில்வாவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சட்டபூர்வமானது இல்லை என நிரூபித்த சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனா்.