மே 18 வடக்கு மாகாணத்துக்கு மட்டும் உரியதாக - யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம்!
முள்ளிவாய்க்காலில் நடைபெறும் நிகழ்வானது தனியே முள்ளிவாய்க் கால் மண்ணில் மடிந்த மக்களுக்கான அஞ்சலி நிகழ்வோ அல்லது மே-18 என்பது தனியே அன்று மடிந்த மக் களை மட்டும் நினைவு கொள்ளும் நாளோ அன்று. மாறாக தமிழினம் எதிர்கொண்ட இனவழிப்பை ஒட்டு மொத்தமாகச் சுட்டி நிற்கும் நாள் தான் மே-18.
இந்நாள் வடக்கு மாகாண த்துக்கு மட்டும் உரியதன்று.
முள்ளிவாய்க்கால் நிகழ்வும் வடக்கு மாகாணத்துக்கு மட்டும் உரித்தான தன்று என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பான அறி விப்பை தொடர்ந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது...........
தமிழர் இனவழிப்பு நினைவு நாளை முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒற்று மையாக ஒரே நிகழ்வாக நடாத்துவதற்கு பல்கலைக்கழக மாணவர் சமூக மாகிய நாம் கடந்த பல வாரங்களாக பெரும் முயற்சியை முன்னெடுத்துள் ளோம்.
கடந்த ஆண்டுகளில் இந் நிகழ்வுகளை தனித்தியாக நடாத்தியவர்களோடு உரையாடி ஒற்றுமையாக ஒரே நிகழ்வாக நடாத்துவதற்கான எமது முயற்சி கள் ஆங்காங்கே இடறுப்பட்டாலும் முன்னேற்றகரமாகவே அமைந்திருந்தது.
பல்வேறு அரசியல் செயற்பாட்டுக் குழுக்களும் அமைப்புக்களும் எமது இந்த முயற்சிக்கு ஆதரவு வழங்கியிருந்தன.
கடந்த ஆண்டு நிகழ்வுகளை நடாத்திய தரப்புக்கள் கூட தமது ஒத்துழைப்பு வழங்கியிருந்தன.
ஆனால் இந்நிலையில் வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடைந்த கதையாக தற்போது வடமாகாணசபை தாமே இந்நிகழ்வை நடாத்துவோமென அறிவித்துள்ளது எமது மன வேதனையை சுமத்தியுள்ளது.
வடமாகாணசபை இந் நிகழ்வை நடாத்துவதானது மீளவும் கடந்த ஆண்டு களைப்போல் நிகழ்வுகள் பிரிந்து நடாத்தப்படும் நிலைக்கே இட்டுச்செல்லும் என்பதை நாம் மனவேதனையுடன் சுட்டிக்காட்டுகின்றோம்.
முள்ளிவாய்க்காலில் நடைபெறும் நிகழ்வானது தனியே முள்ளிவாய்க்கால் மண்ணில் மடிந்த மக்களுக்கான அஞ்சலி நிகழ்வோ அல்லது மே-18 என்பது தனியே அன்று மடிந்த மக்களை மட்டும் நினைவுகொள்ளும் நாளோ அன்று.
மாறாக தமிழினம் எதிர்கொண்ட இனவழிப்பை ஒட்டு மொத்தமாகச் சுட்டி நிற் கும் நாள்தான் மே-18. இந்நாள் வடக்கு மாகாணத்துக்கு மட்டும் உரியதன்று.
முள்ளிவாய்க்கால் நிகழ்வும் வடக்கு மாகாணத்துக்கு மட்டும் உரித்தான தன்று.
எனவே இந்நிகழ்வை வடமாகாண சபைதான் நடாத்துவதென்பது அரசி யற் பொருத்தமற்ற செயல்.
அத்தோடு சர்ச்சைக்குரிய அந்த அரசியல் அதிகாரக் கட்டமைப்பு தமிழர்களைத் தலைமைதாங்கும் கட்டமைப்பாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படவு மில்லை.
இந்நிலையில் தாமே தமிழர்களை ஒருங்கிணைக்கும் அதிகாரக் கட் டமைப்பு என்ற தொனியில், தமக்கே இந்த நிகழ்வை நடாத்த உரித்துண்டு என்று வடமாகாணசபை உறுப்பினர்கள் நினைப்பது பொருத்தமற்றது.
ஏற்கனவே எமது கடந்த அறிக்கையில் குறிப்பிட்டதைப்போல், இந்நிகழ்வா னது ஒற்றுமையென்ற பேரில் தகாதவர்களையும் கூட்டி கூத்தடிக்கும் வகை யில் அமையக்கூடாதென்பது மக்களின் அவாவாகும்.
வடமாகாண சபையா னது இந்த அவாவை நிறைவுசெய்யக்கூடிய தகுதியுள்ளதா என்ற கேள்வியை அவர்களே தமது மனச்சாட்சியைக் கேட்டுக்கொள்ளட்டும்.
மேலும், வடமாகாணசபையானது தேர்தல்வழி அமைக்கப்படும் ஒரு கட் டமைப்பாகும். அது காலப்போக்கில் யார்யார் கையிலாவது போய்ச்சேரும். இன்றிருக்கும் முதல்வர், இனவழிப்பு தொடர்பிலும் தமிழரின் அரசியல் அபி லாசைகள் தொடர்பிலும் சரியான நோக்குடன் செயற்படுகிறார் என்ற நம் பிக்கை எமக்குண்டு.
ஆனால் தொடர்ந்து வரப்போகும் முதல்வர்களும் ஆளுங்கட்சியும், உறுப்பினர் களும் எவ்வாறு அமைவார்களென்பது உறுதியாகச் சொல்லமுடியாது. இன வழிப்புக்குத் துணைபோனவர்கள் கூட மாகாணசபை நிர்வாகத்தைக் கோலோச்சக்கூடும்.
இந்நிலையில் வடமாகாணசபைதான் மே-18 நிகழ்வை முள்ளிவாய்க்காலில் செய்யும் என்ற நிலைப்பாட்டை உறுதியாக்கினால் காலப்போக்கில் இந்நிக ழ்வே கேலிக்குரியதும் கேள்விக்குரியதும் ஆகிவிடுமென்ற கரிசனை எமக் குண்டு.
இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு, தாங்கள் முதல்வராக இருக்கும் போதே இந்நிகழ்வை ஒரு பொதுமக்கள் நிகழ்வாக மாற்ற வழி சமையுங்கள் என்று நாம் முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.
எனினும் வட மாகாண சபையின் தன்னிச்சையான போக்கும் தமது தனிப்பட்ட அரசியல் நலன்கள் அடிப்படையில் சிலர் சிந்தித்ததின் விளைவும் முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ இருந்த ஒன்றுபட்ட எழுச்சி நிகழ்வைக் கேள்விக்குள்ளாக்கி யிருக்கிறது.
பல்கலைக்கழக மாணவர் சமூகம் முன்னெடுத்த இம் முயற்சிக்கு ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகமும் பல்வேறு வழிகளில் தமது ஆதரவை வழங்கி யிருந்த நிலையில் வடமாகாணசபையின் தான் தோன்றித்தனமான இந்த முடிவு எமக்கு மிகுந்த வேதனையை தந்துள்ளது.
இயன்றவரை முயன்றும் அவர்களின் விடாப்பிடியான முடிவால் எமது முயற் சிகள் முழுமைபெறாமல் முடக்கப்பட்டுள்ளதை எமது மக்களுக்கு மிகுந்த மன வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓர் இனத்தின் ஆன்மாவே அவதிக்குள்ளாகித் தவிப்பதை நினைவுகொள்ளும் நாளை – உலகின் மனச்சாட்சியை எம் ஒன்றுபட்ட குரல்களால் உலுப்பும் நாளை மே தினம் எதிர்கொண்ட ஒட்டுமொத்தத் துன்பத்தையும் நினைந்துரு கிக் கரையும் நாளை தமது அரசியல் சுயலாபங்களுக்காக பந்தாட நினைக்கும் அரசியலாளர்கள் மக்களுக்குப் பதில் வழங்கிய தீர வேண்டும்.
எமது ஒற்றுமை முயற்சியின் பலனாக ஏற்கனவே எழுச்சியுற்றிருக்கும் மாணவர் சமூகம், மக்கள் கூட்டம், செயற்பாட்டியக்கங்களின் கோப முறுக லுக்கான பதிலை அவர்களே தயார் செய்ய வேண்டும்.
முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கென அனைத்து மாவட்டங்களிலிருந்தும் நூற் றுக்கணக்கானவர்கள் பேருந்து வசதிகள் செய்து பயணம் மேற்கொள்ளவிருந்த சூழ்நிலையிலும், பல்பேறு மக்கள் அமைப்புக்கள் எமது முயற்சிக்கு ஆதரவு வழங்கி பெரும் மக்கள் அலை திரண்டு வந்து நிகழ்ந்திருக்கக்கூடிய இந்த நிகழ்வை, கடந்த ஆண்டுகளைப் போல் சிதைந்து போக வைத்த பெருமை வடமாகாண சபையினரையே சாருமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.