காணிகளை மீள கையளிப்பதில் விசேட அவதானமென கிளிநொச்சியில் பிரதமர்.! ரணில்
வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் காணிகளை மீள வழங்குவதற்காக விசேட நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். அத்துடன் வடக்கையும் தெற்கையும் அபிவிருத்தி ஊடாக இணைப்பதற்கு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்க்கின்றேன்.
காணாமல்போனோர் அலுவலகத்தின் அதிகாரிகள் விரைவில் கிளிநொச்சிக்கு வருகை தந்து தமது செயற்பாடுகளை முன்னெடுப்பார்கள். இதன் ஊடாக மக்களின் மனிதாபிமான பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு எமது அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றைய தினம் தெரிவித்துள்ளாா்.
காணாமல்போனோர் அலுவலகத்தின் அதிகாரிகள் விரைவில் கிளிநொச்சிக்கு வருகை தந்து தமது செயற்பாடுகளை முன்னெடுப்பார்கள். இதன் ஊடாக மக்களின் மனிதாபிமான பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு எமது அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றைய தினம் தெரிவித்துள்ளாா்.
அனைத்து திட்டங்களுடனும் முன் செல்ல நாம் வடமாகாண சபையுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கின்றோம். முதலமைச்சர் மற்றும் ஆளுநருடன் பேச்சுவார்த்தை நடத்தி இத் திட்டங்களை முன்னெடுக்க நான் எதிர்பார்க்கின்றேன்.
கல்வித்துறையின் முன்னேற்றத்திற்கு தேவையான வகையில் நிதி ஒதுக்கு வேன். ஆசிரியர்கள் பிரச்சினை இருப்பின் எமக்கு அறிவியுங்கள். கல்வி அமைச்சர் ஊடாக அதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பேன். பட்டதாரிகளு க்கு சில மாதங்களில் தொழில் பெற்றுத்தருவதாக நான் கூற விரும்புவதாக பிரதமர் தெரிவித்துள்ளாா்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்த மீளாய்வு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ் விடயங்களுடன் . பிரதமர் அங்கு மேலும் உரையாற்றுகையில்;
கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து ஆராயவே நான் இங்கு வந்திருக்கின்றேன். வடக்கு பகுதியின் மக்கள் பிரதிநிதிகளை நான் சந்தித்த போது இந்த பகுதியின் பிரச்சினைகள் தொடர்பில் என்னால் அறிந்துகொள்ள முடிந்தது.
பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தற்போது இங்கு முன்வைத்த விடயங்களை பாராளுமன்றத்தில் பல தடவைகளும் என்னுடனும் தெரிவித்திருக்கி ன்றார். அந்த விடயங்கள் குறித்து ஆராய்ந்து அபிவிருத்தியை பார்ப்பதற்கே நான் வந்தேன்.
சிறிதரன் எம்.பி. சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் எனக்கு வழங்கிய கடிதத்தில் உள்ள விடயங்கள் குறித்து ஆராய நான் ஆலோசனை வழங்கியிருக்கின்றேன்.
இலங்கையில் காணப்படுகின்ற ஒன்பது மாகாணங்களில் வடமாகாணமே அதிகளவு வறுமையில் வாடுகின்றது என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.
யாழ்ப்பாணத்தை தவிர்த்துப் பார்த்தால் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களே அதிகளவில் வறுமையில் வாடுகின்றன. வவுனியா பிரதேசத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் உள்ளது. யாழ்ப்பாணத்தை முன்னேற்றும்போது அதனூடாக தீர்க்கப்படவேண்டிய பல பிரச்சினைகள் உள்ளன. முதலாவதாக இராணுவத்திடம் இருக்கின்ற காணிகளை மக்களிடம் மீண்டும் கையளிக்கவேண்டும்.
இது ஒரு விசேடமான தேவையாகும். இதன்மூலம் யாழ். நகரை பாரிய நகர அபிவிருத்தியை நோக்கி கொண்டுசெல்ல முடியும்.
அதன்போது நீர் பாவனை மற்றும் வீண்விரயம் ஆகியன தொடர்பில் பிரச்சினைகள் தோன்றியுள்ளன. அதனால் முதலாவதாக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
காணிகளை மீள வழங்கி மக்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகளை முன்னேற்றவேண்டும். அந்த செயற்பாட்டில் தற்போது சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சில பகுதிகளில் குறைபாடுகள் உள்ளன.
சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் இணைந்து அந்தத் திட்டங்களை முன்கொண்டு செல்ல வேண்டும். அதேபோன்று இந்தப்பகுதியில் வாழ்க்கைத் தர த்தை உயர்த்துவதற்கும் அவதானம் செலுத்தவேண்டும்.
1977 ஆம் ஆண்டு மகாவலி திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் முன்னேற்றம் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்றபோதும் வடக்கு பகுதியில் அதன் நன்மை வருவதற்கு முன்னர் யுத்தம் ஏற்பட்டு விட்டது.
எப்படியிருப்பினும் அந்த அபிவிருத்தியை நாம் முன்னெடுக்கவேண்டும். இந்த பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும்போது நீரைப் பெற்றுக்கொள்வது என்பது முக்கியமானது.
மல்வத்து ஓயா நீர்த்தேக்கம் ஊடாக மன்னார் மற்றும் வவுனியா பிரதேசங்களுக்கு குறிப்பிடத்தக்க நீரைப் பெற்றுக்கொள்ளலாம்.
அதேபோன்று தற்போது நாங்கள் கண்டியிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக மொனராகலை வரை பாரிய அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்திருக்கின்றோம்.
ரஜரட்ட பொலன்னறுவை, திருகோணமலை ஆகிய பிரதேசங்களிலும் பாரிய அபிவிருத்தி திட்டஙகளை உருவாக்கியிருக்கின்றோம். அந்த அபிவிருத்தி திட்டங்களை யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களுக்கு கொண்டுவருவதே எமது நோக்கமாகும்.
இலங்கையின் அபிவிருத்தியை யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாந்தோட்டை வரை விஸ்தரிக்க நாங்கள் திட்டமிடவேண்டும். அந்த திட்டத்தின் கீழ் முதலாவதாக கிளிநொச்சி மாவட்டமே அபிவிருத்தி செய்யப்படவேண்டும். அதன் முதல் தேவையாக நீர் காணப்படுகின்றது.
அதற்காக சிறந்த நீர் திட்டங்கள் எமக்குத் தேவைப்படுகின்றன. மழைகாலத்தில் தேவையான அளவு நீர் எமக்கு கிடைக்கின்றது. எனவே மழை இல்லாத காலத்தில் மக்கள் பயன்பாட்டுக்காக நீரை சேமித்து வைக்கவேண்டியுள்ளது.
மழை நீரைப்பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டியுள்ளது.
ரஜரட்ட ராஜதானி இருந்தபோது முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களில் அதிகளவு வயல்நிலங்கள் காணப்பட்டன. அக்காலத்தில் விவசாயத்திற்காக நீரைப்பாதுகாக்கும் திட்டங்கள் இருந்தன. சில இடங்களில் நெல் உற்பத்தி செய்யப்பட்டதுடன் சில பிரதேசங்களில் தானியங்கள் பயிரிடப்பட்டன.
அந்த திட்டங்களை நாம் மீண்டும் ஆரம்பிக்கவேண்டும். அதேபோன்று அப்பிரதேசத்தில் மீன்பிடி தொழிலை முன்னேற்றவும் எதிர்பார்க்கின்றேன். அத்துடன் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் சுற்றுலாத்துறையை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
பரந்தன் பிரதேசத்தில் கைத்தொழில்சாலைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த அனைத்துத் திட்டங்கள் ஊடாகவும் இந்தப்பகுதியை அபிவிருத்தி செய்வது குறித்து நாம் ஆராயவேண்டும்.
கிளிநொச்சி மாவட்டம் 1978 ஆம் ஆண்டு உருவாகியது. அக்காலத்தில் யாழ்ப்பாணம் பகுதியிலிருந்து யாரும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாவதில்லை. அப்பகுதி யுத்தகளமாக இருந்தது. அதனை மீண்டும் முன்னேற்றமடைந்த பிரதேசமாக மாற்றியமைக்கவேண்டும்.
வடக்கு, தெற்கு என்ற பேதமில்லாமல் நாம் மீண்டும் ஒன்றிணையலாம். யுத்தம் முடிவடைந்துள்ளதால் இப்பகுதிகளை தேசிய திட்டங்களுக்காக இணைத்துக்கொள்ள முடியும். காணிப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல தடவைகள் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருக்கின்றார்.
தற்போது அபிவிருத்திகள் குறித்து ஆராய நான் வந்திருக்கின்றேன். கட்டடங்களை நிர்மாணிப்பது மட்டுமன்றி மக்களுக்கு பயன்பெறக்கூடிய வகையிலான பொருளாதார உற்பத்தி குறித்து கவனம் செலுத்த வேண்டும்.
இந்த நாட்டின் மொத்த தேசிய உற்பத்திக்கு கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து கிடைக்கும் பங்களிப்பை ஒரு தசத்தினாலேனும் அதிகரிக்கவேண்டும். எதிர்காலத்தில் இப்பகுதிக்கு நான் மீண்டும் விஜயம் செய்து அபிவிருத்தி திட்டங்கள் குறித்து தேடிப்பார்க்க எதிர்பார்க்கின்றேன்.
விசேடமாக மழைநீரை சேகரிக்கும் திட்டமொன்றை நாம் ஆரம்பிக்கவேண்டியுள்ளது. இதற்காக பரந்தன் பகுதியில் காணியைப் பெற்றுக்கொண்டு பின்னர் அது தொடர்பில் முதலீட்டு சபையுடன் நான் பேச்சுவார்த்தை நடத்துவேன்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இப்பகுதிகளின் இளைஞர், யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்கவேண்டும். அதேபோன்று காணாமல்போனோர் அலுவலகத்தின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன்.
அவர்கள் விரைவில் இப்பகுதிக்கு வந்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவித்தார்கள். அந்தவகையில் மனிதாபிமானப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். இப்பகுதியின் இளைஞர் யுவதிகளுக்காக நாம் சிறந்த எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க வேண்டியுள்ளது.
யுத்தத்தினால் அங்கங்களை இழந்த விசேட தேவையுடையோரின் பிரச்சினை களையும் நாங்கள் தீர்க்கவேண்டியுள்ளது. இந்த அனைத்து திட்டங்களுடனும் முன்செல்ல நாம் வடமாகாண சபையுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம்.
முதலமைச்சர் மற்றும் ஆளுநருடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்தத் திட்டங் களை முன்னெடுக்க நான் எதிர்பார்க்கின்றேன். எதிர்காலத்தில் மக்களின் பொருளாதார வளர்ச்சி குறித்து ஆராய்ந்து பார்ப்பேன்.
அரசியல் ஊடாகச் செய்யப்படவேண்டும். கல்வித்துறையில் முன்னேற்றத்தி ற்கு தேவையான வகையில் நிதி ஒதுக்குவேன். ஆசிரியர்கள் பிரச்சினை இருப் பின் எமக்குத் தெரிவியுங்கள்.
கல்வி அமைச்சர் ஊடாக அதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பேன் பட்ட தாரிகளுக்கு சில மாதங்களில் தொழில் பெற்றுத்தருவதாக நான் கூற விரும் புகின்றேன் எனத் தெரிவித்துள்ளாா்.