Breaking News

மக்களுக்கு ஒா் அவசர எச்சரிக்கை! தவறினால் ஆபத்து

இலங்கையில் நிலவும் கடுமையான வெப்பநிலை குறித்து நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தற்போது அதிகமான வெப்பநிலை நிலவு வதால் நாளொன்றுக்கு 2 லீற்றர் நீர் அரு ந்த வேண்டுமென கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ஊட்டச்சத்து நிபு ணர் ரேனுகா ஜயதிஸ்ஸ தெரிவித்துள் ளார். 

நீர் அதிகமாக அருந்துவது கட்டாயமா கும். அத்துடன் நீர் அருந்தும் போது தேசிக்காய் அல்லது வெள்ளரிக்காய்களை நீரில் கலந்து பருகினாலும் சிறப் பெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்பமான காலநிலையின் போது அதிக மாக நீர் பருகவில்லை என்றால் தலைவி, தலைசுற்று, உடல் வலி, நீர்ப்போக்கு போன்ற நோய்கள் தாக்க கூடும். எனவே இது தொடர்பில் அவதானமாக இருந்து அதிகமாக நீர் பருக வேண்டும். 

அத்துடன் இளநீர் போன்றவைகளை அதிக பருகலாம். அதேபோன்று சிறு பிள் ளைகளுக்கு ஒரு நாளைக்கு ஒன்றரை லீற்றர் நீர் வழங்குங்கள். இந்த நாட் களில் அடிக்கடி குளிப்பதும் நல்லது. அத்துடன் அதிக வெப்பமான கால நிலை யின் போது பயணங்களில் ஈடுபட வேண்டாம். 

கூடியளவு குடைகளை பயன்படுத்த வேண்டும். தொப்பி மற்றும் வெள்ளை நிறத்திலான ஆடைகளை பயன்படுத்துங்கள். இந்த வெப்பம் உடலுக்கு ஏற்ற தல்ல என்பதனால் சிந்தித்து செயற்படுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளாா்.