தேசியத்தலைவர் போன்றே நானும் எனது பயணத்தை தொடா்கின்றேன்!
எமது தேசியத்தலைவர் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினை ஆரம்பி க்கும்போது தனது பணத்தைக்கொண்டே கைத்துப்பாக்கியை வாங்கினார்.
அது போன்றே நானும் இந்த பயண த்தினை தொடங்கும்போது என்னிடம் உள்ள பணத்தினைக் கொண்டுதான் ஆரம்பித்து இருக்கின்றேன் என புனர் வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலை ப்புலிகள் கட்சியின் தலைவர் கந்த சாமி இன்பராசா தெரிவித்துள்ளார்.
இறுதிக்கட்ட யுத்தம் முற்றுப் பெற்ற நாளான 18.05.2009 ஆம் திகதி முள்ளி வாய்க்கால் பகுதியில் நடந்தேறிய அவலங்கள் உயிர் நீத்தவர்களுக்காக எதிர் வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் பகுதியில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பாக நேற்று மட்டக்களப்பு வாகரை பாற்சேனையில் நடை பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவிக்கையில்....
எமது தேசியத்தலைவர் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினை ஆரம்பி க்கும்போது தனது பலத்தினைக்கொண்டே ஆரம்பித்தார், தன்னிடம் இருந்த பணத்தைக்கொண்டே கைத்துப்பாக்கியை வாங்கினார். அதுபோன்றே நானும் இந்த பயணத்தினை தொடங்கும்போது என்னிடம் உள்ள பணத்தினைக் கொண்டுதான் ஆரம்பித்துள்ளேன்.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் முள்ளிவாய்க்கால் நிகழ் விற்குச் சென்று பேசும் போது பயங்கரவாதிகள் அழிந்ததன் பின்னரே இவ்வா றான நிகழ்வை நடாத்த முடிகின்றது என்று பேசும்போது அவருக்கு அங்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அப்போது சுமத்திரன் உடனடியாகவே தனது வாகனத்தில் ஏறிச்சென்றதனை நான் நேரடியாகவே பார்த்தவன்.
நாம் தொடங்கியிருக்கும் கட்சி அரசியல் கட்சி அல்ல போராளிகள் கட்சி நாம் அரசியல் தலைவர்களை நம்பியிருந் தோம் அவர்கள் எங்களை மதிக்கின்றார்கள் இலலை எங்களை ஏறி மிதிக்கும் அளவிற்குத்தான் அவர்களது செயற்பாடு காணப்படுகின்றது.
இன்றுள்ள அரசியல் வாதிகள் அனைவரும் கதிரைக்கு சண்டை போடுகின் றார்கள் இன்றைக்கு இருக்கின்ற அரசியல் வாதிகள் போன்று எங்களை நினை க்காதீர்கள் அது கஜேந்திரகுமார் பொன்னம்பலமாக இருக்கலாம், கருணாவாக இருக்கலாம், பிள்ளையானாக இருக்கலாம், சம்பந்தன் ஐயாவாக இருக்கலாம் இவர்கள் போன்று நாங்கள் அல்ல நாங்கள் ஒரு போராளிகள் கட்சி என்பதனை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஈழப் போராட்டத்தில் இறுதிக்கட்ட யுத்தம் கிழக்கிலேயே ஆரம்பிக்கப்பட்டது மாவிலாறு பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு முள்ளிவாய்க்காலில் முற்றுப் பெற் றது இது யாவரும் அறிந்ததே ஆகையினாலேயே நாம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஸ்டிப்பு நிகழ்வை வாகரை பிரதேச செயலக பிரிவிற் குட்பட்ட பால்ச்சேனை பகுதியில் நினைவுகூற ஏற்பாடுகள் செய்துள்ளோம்.
அந்தவகையில் இந்நினைவேந்தல் நிகழ்வில் எமக்காக கிழக்குப் பல்கலைக் கழக மாணவ ஒன்றியம், இளைஞர் ஒன்றியம், வாகரை இளைஞர்கள் மற்றும் எமது புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் ஆதரவா ளர்கள் உள்ளிட்ட பலரும் எமக்கு ஆதரவு வழங்குவதற்காக முன்வந்துள்ள னர்.
இந்நினைவேந்தல் நிகழ்வில் யாவரும் இன, மத, பிரதேச வேறுபாடுகள் இன்றி உயிர் நீர்த்த உறவுகளுக்காக நினைவுகூற வேண்டுகோள் விடுப்பதுடன் இதனை சாதகமாக சுயநலம் காண சிலர் முற்படுகின்றனர். அந்தவகையில் வடக்கில் நடைபெறும் நிகழ்வுகளை பிரித்து நடத்த வேண்டாம் அனைவரும் ஒன்றித்து நடாத்த வேண்டும்.
எமது மண்ணிக்காக போராடிய நாம் நினைவேந்தல் செய்வதற்காக யாரிடம் அனுமதி கேட்க வேண்டும், ஆகையினால் இந்நினைவேந்தல் நிகழ்வை வாகரை பாலச்சேனை பகுதியில் ஏற்பாடு செய்து சிறப்புற நடாத்த எமது புலம்பெயர் உறவுகள் மற்றும் மாவீரர் பெற்றோர்கள் முன்னாள் போராளிகள் அனைவரையும் ஒன்று சேர்ந்து ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
இப்பத்திரிகையாளர் சநதிப்பில் கட்சியின் ஊடக பேச்சாளர் ஜோன்சன் மற்றும் ஆலோசகர்கள் வாகரை வாழ் பிரதேச மக்கள் உட்பட பலரும் கலந்து கொண் டனா்.