மஹதிர் மட்டுமல்ல நானும் செய்துள்ளேன் - ஜனாதிபதி தெரிவிப்பு!
தேசிய அரசாங்கத்தின் கடந்த மூன்றரை வருடங்களில் இந்த நாட்டில் என்ன நடந்தது என்பது குறித்து திறந்த கலந்துரையாடல் ஒன்றுக்கு முகங்கொடுக்க தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதற்கான கலந்துரையாடலுக்கோ தொலைக்காட்சி பொது நிகழ்ச்சிக்கோ அழைத்தால் வருவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் பிரதமர் மஹாதீர் முஹம்மத் பதவியேற்று ஐந்து நாட் களில் ஒன்பது அமைச்சர்களை கைது செய்ததாகவும், 144 வர்த்தகர்களை மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்ததா கவும் ஆங்கில தேசிய ஊடகமொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தன்னுடைய புகைப்படத்தையும் மஹதிர் மொஹம்மட்டின் புகைப்பட த்தையும் இந்த தகவலைப் போட்டு பதிவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளாா்.
“என்னுடைய புகைப்படத்துக்குக் கீழால் 3 வருடம் எனக் குறிப்பிட்டு கேள்விக் குறியை இட்டுள்ளனர். இந்த தகவல் பொய்யானது. இந்த செய்தி வெளியான உடன் நான் மலேசியாவிலுள்ள தூதரகத்துக்கு தொடர்பு கொண்டு கதை த்தேன்.
அவர்கள் அப்படியொன்று நடக்க வில்லையென்று கூறினர். நான் இந்த அர சாங்கத்தைப் பொறுப்பெடுத்த நாள் முதல் நடைபெற்ற பல்வேறு விடயங்கள் உள்ளன அவற்றை நான் கூற விரும்பவில்லை.
தேவை ஏற்பட்டால் கூறுவதற்கும் நான் பின்நிற்பதில்லை” எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். தமது தனிப்பட்ட அபிவிருத்தி களையும், தன் இன நலத்தையும் மட்டும் எதிர்பார்க்கும் மக்களின் பார்வை யில் எதை செய்தாலும் அதில் குறைக் காண்பது விதிவிலக்கல்ல. எனத் தெரிவித்துள்ளாா்.