Breaking News

தூத்துக்குடி இணையத்தை முடக்கி இரவோடு இரவாக இளைஞர்கள் கைது !

தூத்துக்குடியில் கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி இரவோடு இரவாக 70க்கும் மேற்பட்ட இளைஞர்களை காவல்துறையினா் கைது செய்துள்ளனா். 

தூத்துக்குடியில் அமைதியான முறை யில் நடைபெற்று வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டம், காவ ல்துறையின் கண்மூடித்தனமான அட க்கு முறையால் கலவரமாக மாறி யுள்ளது. 

இதில் அப்பாவி பொதுமக்கள் 13 பேரை அநியாயமானமுறையில் தமி ழக காவல்துறை சுட்டு படுகொலை செய்துள்ளது. காவல்துறையின் இத் தகைய மனிதநேயமற்ற செயலுக்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வரும் வேளையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரு வதாக கூறி 5 தெரிவித்துள்ளது. 

இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட காவல்துறை, இரவோடு இரவாக வீடுகளில் புகுந்து ஆண்களை கொடூரமாகதாக்கியதோடு, 70க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட் டுள்ளது. 

இதனால் தூத்துக்குடி பகுயில் உள்ள பொது மக்கள் மேலும் பதற்றத்துடன் காணப்படுவதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.