"வடக்கில் விகாரை அமைப்பதை தட்டிக்கேட்க உரிமையில்லையென்கிறாா்": சஜித் பிரேமதாஸ..!
வடக்கில் விகாரைகளை அமைத்தாலும் சரி தெற்கில் கோவில்களை அமைத் தாலும் சரி அதனை தடுத்து நிறுத்துவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது என வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள் ளாா்.
வடக்கில் விகாரைகளை அமைக்கக் கூடாது, தெற்கில் இந்து ஆலயங் களை அமைக்கக்கூடாதென சிலர் சிந் திக்கின்றனர். இவ்வாறானவர்கள் எமக்கிடையில் இன, மத வேறுபா ட்டை உருவாக்குவதனூடாக அவர்கள் சுகபோகங்களை அனுபவிக்கின் றார்கள்.
வடக்கில் விகாரைகளை அமைத்தாலும் சரி தெற்கில் இந்து ஆலயங்களை அமைத்தாலும் சரி அதனை தடுத்து நிறுத்துவதற்கு யாருக்கும் உரிமை கிடை யாது.
நாம் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகள். ஒற்றுமையின் மூலமாக இந்த நாட்டினை கட்டியெழுப்ப முடியும். ஆகவே பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்பவர்களை கண்டு கொள்ள வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.