Breaking News

யுத்தத்தின் வடுக்கள் தொடர்வதாக - கனடா பிரதமா் .!

இலங்கையில் நல்லிணக்கம் சமாதானம் நீதி போன்றன நிலவுவதற்கும், நிலை மாற்றுக்கால நீதி தொடர்பான சர்வதேச மற்றும் உள்நாட்டு உறுதி மொழிகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வதற்கான முயற்சிகளில் ஈடு பட்டுள்ளவர்கள் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கும் கனடா தனது ஆனித் தரமான ஆதரவை தெரிவித்துள்ளது. 

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஒன்பது வருடங்க ளாகியுள்ளதை குறிக்கும் முகமாக விடுத்துள்ள அறிக்கையில் கனடா பிர தமர் ஜஸ்டின் ட்ருடே இவ்வாறு தெரி வித்துள்ளார்.

யுத்தத்தில் சிக்கி உயிர்தப்பியவர்கள் தங்கள் இழப்புகளிற்கான பதில்களை கோரி நிற்கும் அதேவேளை யுத்தத்தின் காயங்கள் தொடர்ந்தும் நீடிப்பதாக கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒன்பது வருடங்களில் நான் பாதிக்கப்பட்ட கனடா தமிழர்கள் பலரை சந்தித்துள்ளேன், அவர்களின் கதைகள் இலங்கை நிரந்தர சமாதானம் உண்மை யான நல்லிணக்கத்தை அடையவேண்டியதன் அவசியத்தை நினைவுபடுத்தி யுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

யுத்தத்தில் சிக்கி தப்பியவர்களின் நம்பிக்கையை பெறக்கூடிய பொறுப்புக் கூறும் செயற்பாடொன்றை முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றேன் எனவும் கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.